Sunday, April 30, 2006

நூல்.. நூலே நீ...!!!!

உரத்த உரையாடல் நமக்குள்
ஆழ் நிலை மௌனம் வெளியில்

எப்போதும் நீயே பேச
தவறாது நானே கேட்க
மீற இயலாத ஒப்பந்தம்- நமக்குள்

காதலை கற்பிக்கிறாய்
காமத்தையும்தான்

அழுதும் தீராத
ஆழ்மன சோகத்தை
அத்யாயமாக்குகிறாய்

சோகப் புதைகுழியில்
சோர்விக்கிறாய்

என் கோபம், தாபம்
நகைத்தல், கதைத்தல்
எல்லாம் உன்னோடு

விரல்கள் உன்னை தழுவ
கண்கள் உன்னை வருட - என்
நினைவு முழுதும் நீ

உன்னுடனான என் தனிமை
எனக்கென்றும் இனிமை

ஒவ்வொரு தனிமையிலும்
உன்னைப்போல்
இன்னொரு நண்பன்

கோபிக்காதே...
உன்னில்தானே எழுதப்பட்டிருந்தது

ஒவ்வொரு நல்ல நூலும்
ஒரு நல்ல நண்பனென்று.