Thursday, May 04, 2006

மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

“ உன்னை விட அவரு குள்ளம் கிடயாது... அது போதாதா..?

“ இல்லடா.. நானே கொஞ்சம் குண்டு.. அதுக்கு ஏத்த மாதிரி அவரும் கொஞ்சம் ஹைய்ட் வெயிட்டா இருந்தாத்தானே .. வெளிய தெருவ போகும் போது நல்லா இருக்கும்..?

“ இப்டி சொல்லி சொல்லியே வர்ற இடத்தையெல்லாம் தட்டி கழி. இப்பவே இருபத்தி நாலு.. என் ப்ரண்டோட அம்மால்லாம் “ ஏன் உன் அக்காக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகலன்னு தொளைச்சு எடுக்கறாங்க.. வெளிய தல காட்ட முடியல”

உண்மையில் இப்போது பவித்ராவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவளைவிடவும் அரையடியாவது குள்ளமாக இருப்பார்.

“ பொண் பார்க்க வந்த அன்னைக்கே .. நடு ஹால் வரைக்கும் ஷூ போட்டுன்டு வந்துட்டார். அது ஷூவே கிடையாது.. சின்ன சைஸ் ஸ்டூல்.. எனக்கு ஈக்வல் ஹைட்னாலும் பரவாயில்லை.. என்னைவிட குள்ளம்ன்னா எல்லாரும் கேலி பண்ணுவாங்கப்பா..?

“ நேத்து டாக்ட்டர்ட்ட போனேன்.. அதே டேப்லட்ஸ் கன்டினியு பண்ணச் சொன்னார்.. நெய் எண்ணெய்லாம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னார்..”

அதாவது என்னோட உடல் நிலை அதே நிலைமைலதான் இருக்கு.. இதையெல்லாம் கன்சிடர் பண்ணி ஒரு முடிவுக்கு வா..ஒரு முடிவு என்ன? இந்தப் பையனையே முடிச்சுடுங்கப்பான்னு வாயை திறந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிடு .. உன்னை பிடிச்சு தள்ளிடறோம் என்பதைப் போலத்தான் பெற்றெடுத்த தந்தையும் ,பின்னால் அவதரித்த தம்பியும் பேசினார்கள்.

கண்ணில் நீர் வழிய, நெஞ்சம் வலிக்க ஜன்னல் கம்பிகளின் வழி வெளியே பார்த்தாள் பவித்ர. கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி மனைகள்..அதில் இரை தேடும் சிறு பறவைகள் தங்கள் மனதுக்குப் பிடித்த இணைகளோடு .. அவற்றிற்கு இருக்கும் சுதந்திரம் கூட தனக்கில்லை என நினைக்க நினைக்க மௌனமாய் அழுகை வந்தது.

அவள் அழுதததை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவேயில்லை தனயனும் தகப்பனும்.

தொடரும்...

6 comments:

லதா said...

தொடர்கதையின் முடிவினைக் கதையின் தலைப்பிலேயே சொல்லிவிடக்கூடாது
:-(((((

அருள் குமார் said...

ஒருவழியா ஆரம்பிச்சிடீங்களா. இது முதல் அத்தியாயமா இல்லை முன்னுரையா? ரொம்ப சின்னதா இருக்கே! ஆனால் தலைப்பே ஒரு சிறுகதை! கலக்குங்கள்.

ஆமாம்... புதிய தமிழ்மணத்தில் உங்கள் blog பதிவுசெய்யப்படவில்லையா?

Raghavan alias Saravanan M said...

கவிதைத்துவமான தலைப்பு தோழி.
இடையில் சில காலம் பணிப்பளு அதிகமாயிருந்ததோ தங்களுக்கு?

வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன்.

பத்ம ப்ரியா said...

ஹாய் லதா, ஹாய் அருள், ஹாய் சரவணன்

தங்களது கருத்துப் பதிவுகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

தலைப்பை வைத்தே கதையை புரிந்து கொண்டீர்களா லதா?

ஆமாம் அருள் புதிய தமிழ் மணத்தில் என் ப்ளாக் பதிவு செய்யப்படவில்லை. கூடிய விரைவில் பதிந்துவிடுவேன்.

சரவணன் .. நீங்கள் கேட்டிருந்தது போல் எனது அலுவலகத்தில் அலுவலக வேலையையும் கொஞ்சமாவது செய்யவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள். அதனால் தான் ப்ளாக் பக்கமே வர இயலவில்லை.

லதா said...

இந்தத் தொடர்கதை முடியட்டும். பின்னூட்டமிட ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.

Raghavan alias Saravanan M said...

மிக நன்றாகச் சொன்னீர்கள் தோழி.

ப்ளாக் என்று இயம்புவதற்குப் பதில் "வலைப்பூ" என்று சொல்லலாமே?