Sunday, September 18, 2005

நிலா - பௌர்ணமி

அது என்ன அது... காஸிப்ல பேசப்படற ஹீரோயின்ஸ் எல்லாரும் ஒரு சூட்கேஸ் எடுத்துகிட்டு.. பூனா போற ரயில்ல ஜன்னலோர சீட்டா உக்கார்ந்து, பின் பக்கம் தலை சாய்ஞ்சு... வெத்து பார்வை பாப்பீங்க.. ஆபீஸ் ப்ரண்டோ.. லவ் பண்ணவனோ ஜன்னல் பக்கம் நின்னு, திராபையா “ உன் முடிவை மாத்திக்கவே மாட்டியா நிலான்னு“ டயலாக் பேசனுமா?

உன்னை அப்டி பேச சொன்னமா நாங்க? உனக்கு எப்டி தெரிஞ்சுது நான் பூனா போறேன்னு?

நந்தினியும் ஷிவாவும் போன் பண்ணாங்க

நந்து... என்னடி இது? ஷக்தி... தண்ணி வாங்கிட்டு வர்ரியா? தாகமா இருக்கு

ம்.. என்னை இங்கேர்ந்து போடாங்கற.. சரி.. வாங்கிட்டு வறேன் - அவன் கிளம்பி போனதும்

நந்து... என்னடி இது...? இவனுக்கு ஏன் சொன்ன?

நானும் ஷிவாவும் எவ்ளோ சொல்லியும் நீ நிக்கல, முன்னபின்ன தெரியாம பூனாக்கு நீ போயி.. ? நீ இல்லாம எங்களால இருக்க முடியாது நிலா.. ஐ திங்க் ஷக்தி லவ்ஸ் யு

போதும் .... நிறுத்ரியா....அவன் வர்ரான்?

இந்தா.. வாட்டர் பாட்டில்.. நந்து... நீ எதாவது மேகசின் வாங்கிட்டு வாயேன்.. பூனா வரைக்கும் மேடம் படிச்சுக்கிட்டே போகட்டும் - என்றான்

ம்.. இப்ப நீ.. என்னை இங்கர்ந்து போடீங்கற.. சரியா?

நீ நிலா மாதிரி இல்ல.. ஸ்மார்ட்... சட்னு புரிஞ்சுக்கற- நந்தினி கிளம்பி போனதும்

ம்.. இப்ப சொல்லுங்க மேடம்.. எதுக்கு இப்ப பூனா? ட்ரான்ஸ்பர் எல்லாம்?

ப்ச்..ஷக்தி .. லீவ் மீ அலோன்

இந்த பீட்டரெல்லாம் வேணாம்மா.. கொஞ்சம் தமிழ்லயே பேசலாமா..ட்ரெய்ன் இன்னும் சென்னைலதான் இருக்கு

என்ன தெரியனும் உனக்கு?
நீ ஏன் இன்னும் உன் லவ்வை என்கிட்ட சொல்லலைன்னு தெரியனும்?

யார் உன்னை லவ் பன்றது?
வேறயாரு...? நீங்கதான் மேடம்!

நாங்க சொன்னமா அப்டி?
அதான் இப்ப சொல்லுங்கன்னு சொல்றோம்

ப்ளீஸ் ஷக்தி.. நான் உன்னை லவ் பன்னல... லவ் பன்னவே இல்லை
ப்ராப்ளமே இல்ல.. நான் உன்னை லவ் பன்றேன்.. அது போதும் .. வா .. கிளம்பு.. ஸ்வாமிஜி முன்னடி நம்ம கல்யாணம் நடக்கட்டும்

நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கற மூட்ல இல்ல.. பூனா போற மூட்ல இருக்கேன்.

இந்தா உனக்கு பிடிச்ச பாலகுமாரன் - என நாவல்களை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் நந்தினி.

நந்து இவனை கூட்டிண்டு நீ கிளம்பு... ஆட்டோல போய்டு....இப்ப பஸ் இருக்காது

அப்ப நீயும் வா நிலா.. ம்.. கிளம்பு.. பூனா தனியா போய் என்னடி பன்னுவ

அங்க நான் ஒன்னும் தனியா இருக்க மாட்டேன்.. நம்ம ஆபீஸ் ப்ராஞ்ச் இருக்கு.... நீலகண்டன் சாரும் அங்கதான் போயிருக்கார்.. அவாத்து மாமி எனக்கு நல்ல பழக்கம்.. அவங்களோட இருந்துப்பேன்.

அங்க மட்டும் இந்த காஸிப் வராதா...? நீ போறத்துக்கு முன்னாடி பூனாக்கு அது போயிருக்கும்.

இல்ல நந்தினி.. மேடம் ப்ளான் உனக்கு புரியல.. மேடம் அங்க போய் செட்டில் ஆகி ஒரு ரெண்டு மாசம் ஆனதும் வர்மாவோ, ஷர்மாவோ எவனாவது ஒரு மாங்கா மாட்டுவான்.. அவனை லவ் பன்னுவாங்க.. அவனுக்கு மேட்டார் தெரியாதுன்னு அவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுன்டு அப்படியே செட்டில் ஆயிடுவாங்க.. மனசில என்னை நினைச்சுக்கிட்டு அவனோட வாழ்வாங்க..!

ஷக்தி.. திஸ் ஈஸ் டூ மச்.. ஓவரா பேசற... நான் அடிச்சா தாங்க மாட்ட...!

இதோடா.. உண்மையை சொன்னா எரியுதோ?

என்ன உண்மை?

உன்னோட ஷிவா மேட்டர் என்கிற உண்மை

எழுந்து போடா..

நாந்தான் அதெல்லாம் மன்னிச்சு.. மறந்து .. பெருந்தன்மையா உனக்கு வாழ்க்கை தர தயாரா இருக்கேனே..! என்னையும் போடாங்கற!? - நந்தினியை பார்த்து ஓரக்கண் சிமிட்டினான், நந்தினி சிரிப்பை மறைக்க ஸ்டிக்கர் பொட்டினை நேர் செய்ய வேண்டி இருந்தது.

என்ன..? மன்னிச்சு....மறந்து.. பெருந்தன்மையா...? என்னமோ நான் ஸ்பாயில் ஆயிட்ட மாதிரி பேசற...? அடி படுவ.. ஆமா சொல்லிட்டேன்..

அப்ப வா.. வந்து என்னை லவ் பன்னு

போதும் ஷக்தி .. நிறுத்ரியா...? தாங்கல....

நிலா.. நீ ரொம்ப அலட்றியோன்னு தோணுது எனக்கு – என்றாள் நந்தினி

நீ சும்மா இரு நந்து.. இங்க பாரு ஷக்தி.. பூனா போற அவசரத்துல சில உண்மைகளை உன்கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டி இருக்கு.. நீ ஸ்மார்ட்டா இருக்கடா.. கொஞ்சம் அழகாவேற இருக்க.. உன் ஆபீஸ்லயே நாலைஞ்சு உன் பின்னாடி சுத்துதுன்னு கேள்விபட்டேன்.. அதுல ஏதாவது ஒன்னு ட்ரை பன்னேன்...

ரெண்டு ரெடி பன்னிட்டேன்... ஆனா ரெண்டும் சின்ன வீடாத்தான் வருவேன்னுருச்சுங்க...!!!

தேவையா நிலா இது நமக்கு..? கொஞ்சம் சீரியஸா பேசலாமா? நிலா இங்க பாரு.. இப்ப இங்க இருந்து நான் நம்ம ரூமுக்கு போகனும்.. நைட் டைம் பயமா இருக்கு... யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது.. இன்னைக்கு தேதிக்கு அப்படி துணையா வர யாரும் எனக்கு இல்ல.. நான் தனியாத்தான் போகனும்.. தனிமை மரணத்துக்கு சமம்.. ஷக்தி உன்னோட வாழ்க்கை முழுசும் கூட வரேங்கறான்.. அவன் மனசை புரிஞ்சுக்க.. பெட்டிய எடுத்துக்கிட்டு பெட்டிய விட்டு இறங்கு...

நந்து நீ சும்மா இரு.. ஷக்த்தி இங்க பாரு.. என்னை புரிஞ்சுக்க.. ஷிவாக்கு ஹெல்ப் பன்ன போய் .. என்னொட பேரு கெட்டுடுச்சு

பேரு தானே கெட்டுடுச்சு..? வேற பேரு வெச்சுக்க.. கண்ணாம்பா ந்னு வச்சுக்க.. உன் முட்ட முட்டை கண்ணுக்கு பொருத்தமா இருக்கும்.

சீரியசாவே ஆக மாட்டியா நீ?

நீ என்னை லவ் பன்றேன்னு சொல்லு.. அப்புறம் பாரு.. நான் எவ்ளோ சீரியஸ் ஆகறேன்னு?

ஷக்தி நான் எதுக்கு உனக்கு?

இது என்ன கேள்வி..? கல்யாணம் செஞ்சு குடித்தனம் நடத்தத்தான்..

அதுக்கு நான் தகுதி இல்லைன்னு எனக்கு தோணுது

மேட்டர் சீரியஸாவதை உணர்ந்து அவ்விடத்தி விட்டு அகல நந்தினி மெல்ல எழுந்தாள்.. பார்வையை விலக்காமலேயே, நிலாவும் ஷக்தியும் ஆளுக்கு ஒரு கையாக பிடித்து இழுத்து அவளை பழைய இடத்திலேயே உட்காரவைத்து விட்டு..

ம்.. சொல்லு

நான் வேண்டாம் ஷக்தி உனக்கு.. முழு அர்ப்பணமா என்னை நான் உனக்கு தர முடியாது

ஏன் முடியாது?

ஏன்.. ஏன்னா ஆபீஸ்ல என்னை பத்தி பல விதமா பேசிட்டாங்க.. என்னால நீ தலை குனியக் கூடாது ஷக்தி

அவங்க பேசறத்துக்கும்.. நான் உன்னை கல்யாணம் பன்றத்துக்கும் என்ன சம்பந்தம்.. உன்னை பத்தி எனக்குத் தெரியும் நிலா..

இப்ப லவ் வேகத்தில பேசற..பின்னாடி ஏதாவது ப்ரச்சனைன்னா சொல்லிகாட்டுவியோன்னு பயமா இருக்கு

கண்டிப்பா சொல்லிக் காட்டுவேன்.. கருணைக்கும் காதலுக்கும் வேறுபாடு காட்ட தெரியாத முண்டம்டீ நீ ந்னு சொல்லி காட்டுவேன்..

இல்ல ஷக்தி.. இது சரி வரும்னு தோணல.. நான் வேண்டான்டா உனக்கு.. நீங்க கிளம்புங்க.. இஞ்சின் மாட்றாங்க

நீ ஷிவாக்கு உதவி செஞ்சது தப்பே இல்லை.. ஆனா.. அதையே ஓவரா அலம்பாம.. சிலுப்பாம.. அமைதியா செஞ்சிருந்தா இந்த பேச்சு இல்லயே..? என்றாள் நந்தினி

உதவி செஞ்ச மாதிரியா பேசினாங்க...? இவங்களை மனுஷங்கன்னு நினைச்சு இவ்ளோ நாள் பழகி இருக்கேனே நான்...!? இந்த சமுதாயத்தோட வாழறதை விட கண் காணாம போலாம் நந்து..

நீ எங்க போனாலும் மனுஷங்க மனுஷங்கதான்.. பாதை முழுதும் முட்கள் இருக்கும், நாம் தான் முன்னெச்சரிக்கையா பார்த்து நடக்கணும்

அந்த முள் என் கண்ணை குத்தினாலும் பரவாயில்லை ஆனா உன்னோட மனசை குத்திட கூடாது ஷக்த்தி.. நீ நல்லாயிருடா.. உனக்கு நல்லவளா அமைவா.. நான் போறேன்

வா ஷக்தி.. இது தேறாது... நாம போலாம்.. ரொம்ப சிலுப்பிக்கறா.. ஏய் போய் சேர்ந்ததும் .. என் செல்லுக்கு ஒரு கால் பன்னு.. டேக் கேர்.. வாடா.. போலாம்.. கோபத்துடன் எழுந்தாள் நந்தினி.

நிலா...இன்னைக்கில்லைன்னாலும்.. நீ ரிடையர் ஆவறத்துக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட லவ் சொல்லனும்னு நீ நினைச்சா.. என்னோட செல்லுக்கும் ஒரு கால் பன்னு நிலா.. உன்னோட அந்த காலுக்காக சிம் கார்ட் மாத்தாமயே என்னோட செல் எப்பவும் காத்திட்டிருக்கும்.

அந்த கம்பார்ட்மென்ட் விட்டு இறங்கி வேகமாய் நடந்து போனார்கள் நந்தினியும் ஷக்த்தியும்... அவர்கள் திரும்பி பார்ப்பார்கள் என எதிர்பார்த்தாள்.... அவர்களுக்கு டாடா சொல்ல ஜன்னல் வழி கையெல்லாம் நுழைத்து தயாராக இருந்தாள்.. ஆனால் அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை.. ஏக்கமாய் இருந்தது. சட்டென அனாதை ஆனதை உணர்ந்தாள்.. நந்தினி சொன்னது உண்மைதான்.. தனிமை மரனம் தான்.

இந்தக் கம்பார்ட்மென்டில் தன்னுடன் பயணிக்கப் போகிறவர்கள் யார் யார் என பார்த்தாள்...அழகாய் முக்காடு இட்ட, எலுமிச்சை நிறத்தில் ஒரு பெண்மனி, பக்கத்தில் அவளது கணவன்... அவளது இரண்டு குழந்தைகள்.. இரண்டு மூன்று பெரியவர்கள், ஒரு இளம் பெண்.

சோகமும் பயமும் இதயத்துள் கனக்க.. சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. வண்டி கிளம்பியது.. என் சென்னை.. என் ஷக்திவேல்.. என் நந்து.. எல்லோரையும் விட்டு விட்டு போகிறேன்.. நாட்கள் செல்லச் செல்ல என்னை மறந்து விடுவார்கள்.. மறக்கட்டும்.. அதுதான் தேவை.

ஆனாலும் நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்க.. கண்கள் கனக்க அழுகை வந்தது.. யாரும் பார்க்கும் முன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு தன் பெட்டியைத் திறந்து டைரியை எடுத்தாள் அதில் பொதிந்து வைத்திருந்த இரண்டு போட்டோக்களை எடுத்தாள் அவற்றுள் ஒன்று அவளுக்கும் ஷக்திவேலுக்கும் நடுவில்.. இருவர் தோள்களிலும் ஆதரவாய் கை வைத்தபடி சிரித்துக் கொண்டே ஸ்வாமிஜி நிற்கும் போட்டோ, இரண்டாவது ஷக்தி –ஹைய் ஜம்பில் முதல் பரிசு வாங்கிய கோப்பையுடன். வெகு நேரம் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்ணீரை கட்டுப் படுத்தவோ.. துடைக்கவோ நினைவில்லை அவளுக்கு.

நிலாவயே பார்த்துக் கொண்டிருந்த அந்த வடக்கத்தி பெண்மனி கொஞ்சம் அதிர்ந்து விட்டாள்.. ஒரு தட்டில் இரண்டு பூரியும், சப்ஜியும் வைத்துக் கொண்டு.. தன் கணவனிடம் கண்களாலேயே அனுமதி பெற்று, இவளருகில் அமர்ந்து.. இவளது தோளை மெல்லத் தொட்டாள்.. இதை சாப்பிடு என்பதாய் பார்த்தாள். பெட்டியில் ஏறியதிலிருந்து.. நிலா, ஷக்தி, நந்தினிக்கு இடயே நடந்த உரையாடலை கவனித்து ஓரளவு தான் பார்த்திருந்த சீரியல்களில் வந்த கதைகளுடன் தொடர்புபடுத்தி நிலாவின் இன்றைய நிலையை கணித்து வைத்திருந்தாள்.. அதற்காகவே சப்ஜியை கொஞ்சம் அதிகம் வைத்துத் தந்தாள். தலை நிமிர்ந்து பார்த்த நிலா நெகிழ்ந்து போனாள்.. ஆனால் தற்போதைய நிலைமையில் சப்ஜி தொட்டு தொட்டு பூரியை கடித்து கடித்து சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை.. எனவே

மாப் கரோ ஜீ.. முஜே நஹி சாஹியே - என்றாள்

அதற்கு அந்தப் பெண் “ ஏன் வேணாம்னு சொல்றீங்க? அப்றமா வேணா தரட்டா? என்றாள். சரி என தலையாட்டிவிட்டு இடையில் நிறுத்தியிருந்த அழுகையை தொடர வசதியாக முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள்..

இழந்துவிட்டேன்.. என் வாழ்க்கையையே இழந்து விட்டேன்.. ஷக்தி ஐ லவ் யூ டா.. நான் எந்த தப்புமே பன்னலடா.. சுமதியை பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துச்சு.. பைத்தியமான என் எம்மாவை வச்சுக்கிட்டு என் அப்பா எவ்ளோ கஷ்ட்டப்பட்டாருன்னு உனக்கே தெரியும்..கடைசீ நாட்கள்ள நல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சும்.. கொஞ்சம் டெவெலப்மென்ட் தெரிஞ்சும்.. மோசமான ஹெல்த் கன்டிஷனால என் அம்மா எனக்கு இல்லை.. இப்படி உதவி செஞ்சா என்னோட பேர் கெட்டுப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. நீ எங்க இருந்தாலும் நல்லா இரு ஷக்தி. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பன்னிக்க.. எனக்கு கல்யாணப் பத்திரிக்கை மட்டும் அனுப்பிடாத.. அதை பிரிச்சு படிக்கும் போதே நான் செத்துருவேன்.. நந்து.. என்னை மறந்துடாத நந்து.. ஷக்த்திக்கு கல்யாணம் முடிஞ்சதும் நான் சென்னை திரும்பி வருவேன்.. அப்போ நான் தலை சாய்ச்சு அழ எனக்கு உன் மடி வேணும் நந்து.. கோவிச்சுக்கிட்டு திரும்பி பாக்காமகூட போன இல்ல நீ.. போ.. போ.. நான் வேணாம்தானே உனக்கு - பொங்கி பொங்கி அழுதாள்.. துப்பட்டா நனைந்து.. சூரியும் நனைந்து.. ஆனால் அழுகை அடங்கவில்லை. மீண்டும் அவளின் தோள்கள் மெல்ல தொடப்பட்டன..

எனக்கு வேணாங்க.. பசிக்கல - என சொல்ல நினைத்து தலை நிமிர்ந்தவள்.. அதிர்ச்சியில் உறைந்தாள்

ஏய் ஷக்தி.. நீ போகல? நந்து.. நீயும் போகல !?
எப்டி போவோம்.. ஹீரோயின் அழுதுட்டு இருக்கீங்களே?

வண்டி சென்னயை தாண்டியாச்சு.. என்ன விளையாடறீங்களா...?
பூனாக்கு டிக்கெட் எடுத்துருக்கோம்

என்னது.! பூனாக்கா? அடப்பாவிங்களா...!!
சரி .. கொஞ்சம் தள்ளிக்கறயா நாங்க உக்காரணும்.உட்கார்ந்தார்கள்

மீண்டும் தொடரலாமா...மேடம் ஏன் அழறீங்க? அட என் போட்டோ...! லவ்வு......!? என் மேல? சொல்லித் தொலையேன்.. ஷக்த்தி உன்னை லவ் பண்றேன்டான்னு சொல்லித்தொலையேன் முண்டம்.

ஆயிரம் இருந்தாலும்.. நான் எந்த தப்பும் பன்னலன்னு உனக்கு எப்டி நான் ப்ரூவ் பன்னுவேன்?

உன்னை நிரூபிக்க சொன்னனா நான் இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் நிலா. நீ மூனுமாசம் லீவ் போட்டுட்டு சுமதியை பார்த்துகிட்டது எல்லாம் நான் அங்க வந்தப்ப நேர்ல பார்த்தேன்.. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு உன் கிட்ட பேசல.. நந்தினி அங்க இருந்தப்ப தான் நான் அங்க வந்தேன்.. பேசறவங்க என்ன வேணா பேசுவாங்க... அதை பெருசா மதிச்சு பூனாக்கெல்லம் டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு ரயில் மூழ்கற மாதிரி அழுதுகிட்டே கிளம்பற கேணச்சிய நான் பார்த்ததே இல்ல நிலா.

எந்த வித நெருடலும் இல்லாம சர்ப்பணமா என்னை நான் உனக்கு தந்திருக்கனும் ஷக்தி

அதைத்தான் எப்பவோ தந்துட்டியே

என்ன சொல்ற...!?

படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு நம்ம ஆஸ்ரமத்திலேர்ந்து கிளம்பர அன்னைக்கு இதே மாதிரி பிழிய பிழிய அழுதியே .. அன்னைக்கு உன் கண்கள் சொல்லுச்சு “ ஷக்தி ஐ லவ் யூ டா.. நீ இல்லாம நான் இல்ல.. உன்னை விட்டுட்டு போக முடியலடா ந்னு” சொல்லுச்சு. உனக்காகத்தான் ஸ்வாமிஜிய விட்டுட்டு.. விவசாயத்தை விட்டுட்டு.. உன் கிட்டயே இருக்கனும்... தினமும் உன்னை பார்க்கனும்னு சென்னை வந்து ஏதோ ஒரு வேலைல சேர்ந்தேன்.. நீயும் சொல்லுவ சொல்லுவன்னு பார்த்தா.. மேடம் சமூக சேவகி ஆகி.. பட்டப் பேர் வாங்கிகிட்டு.. சென்னையை திட்டிட்டு பூனா கிளம்பரீங்க.. சரி இது ஆவறதில்லைன்னுதான் நானும் நந்தினியும் பூனாக்கு டிக்கெட் எடுத்தோம்.

ஆனந்த கண்ணீர் புறப்பட்டது நிலாவின் கண்களில் இருந்து.. மெல்ல சிரித்தாள்.. நந்தினியும் சிரித்தாள்.. ஷக்த்தியும் மெல்லிய புன்னகை புரிந்தான்.. மூவரின் கண்களிலும் நீர் திரை இட்டது.. நிம்மதியும் அழுகயைத்தான் தருகிறது.. என் நந்தினியும்.. என் ஷக்தியும் பக்கத்திலிருப்பது எவ்வளவு நிம்மதி.. அவளையும் அறியாமல் நந்தினியின் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்தது நிலாவின் கைகள்..

ஒரு நல்ல, திடீர் திருப்பங்கள் நிறைந்த எட்டரை மணி டி.வி சீரியலை பார்த்த த்ருப்த்தியில் முதுகு சாய்த்து ரிலாக்ஸாகினர் அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள்

சரி.. சிரிச்சது போதும்.. பூரீ சாப்ட்றீங்களா?

ஏது பூரி..? ஒரே நேரத்தில் கேட்டனர் நந்தினியும் ஷக்தியும்

நிலாவின் கண்கள் வடக்கத்தி பெண்மனியின் கண்களை இறைஞ்சின.. “ பூரி இல்லைன்னு சொல்லி ப்ரண்ட்ஸ் எதிர்க்க மானத்தை வாங்கிடாதீங்க” என்பதைப்போல பார்த்தாள்.

இவர்களது உரையாடலை மனம் ஒன்றி கண்களில் நீர் வழிய.. ஒண்ணு மண்ணா கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட் பெண்மனி இன்னும் நான்கு பூரிகளை சேர்த்து வைத்து மொத்த சப்ஜியையும் கவிழ்த்து கொட்டி ஆனந்த கண்ணீருடன் தந்தாள்.. டி.வி. சீரியல்களை திட்டக் கூடாது.. அவைகள் தான் மனிதர்களை எவ்வளவு மென்மையாக்குகின்றன?

வெள்ளியை வார்த்து ஊற்றிய பௌர்ணமி நிலவொளியில் மர இலைகள் பளபளக்க.. புன்சிரிப்புடன் வேகமெடுத்தது பூனா நோக்கி செல்லும் அந்த ரயில்.. தென்றல் அவர்களின் கண்ணீரை காயச் செய்தது.

ஷக்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை ஆயிரம் காவியங்களைச் சொன்னது...எப்பொழுது சொல்லப் போகிறாய் நிலா...? அந்தக் கவிதைத் தருணம் எப்போது? என கேள்விகளையும் கேட்டது.

வடக்கத்திப் பெண், அவளது குடும்பம், மற்ற பயணிகள்..அவர்களது சுற்றமும் நட்பும் சூழ.. தொடர்ந்து கவனிக்க.. நந்தினியும் ஷக்தியும் எதிர் பார்க்காத அந்தத் தருணத்தில், மெல்லிய வெட்கப் புன்னகை இதழ்களில் தவழ.. கால் விரல்கள் தரையில் கோலமிட, கண்களை மெல்ல உயர்த்தி ஷக்தியை பார்த்து .. நிலா அந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னாள்... அவை... ஷக்தி பூரி சாப்டு.

அடிக்க வராதீங்க.. கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான்.. காதலெல்லாம்.. பூரி தட்டை கைல வச்சுக்கிட்டு ..ஓட்ற ட்ரெயின்ல.. பத்து பதினஞ்சு பேர் வச்ச கண் வாங்காம பார்த்துட்டிருக்கும் போது.. ஐ லவ் யூ டான்னு சிம்பிளா சொல்ற விஷயமில்லீங்க.

மழையடித்து காய்ந்த.. மலைக்கோயில் கற்படியில், கைப்பிடி சுவர் சாய்ந்து.. அருகருகே நிற்கையில்.. தூரத்து வயல்களை தழுவிவந்த தென்றல் முன் நெற்றி குழல் கலைக்க.. மௌனமாய் கண்கள் கலக்க.. மெல்லிய முல்லை வாசத்தோடு “ ஷக்த்தி ஐ லவ் யூ.. ஐ லவ் யூடா செல்லம் “ என மென்மையாய் சொல்ல வேண்டிய அற்புதமான விஷயம்.

நம் நிலாவும் அவளது ஷக்தியிடம் தன் காதலை சொல்லுவாள்.. இப்போது இல்லை...

மலைக்கோயில் வாசலில்.. கார்த்திகை தீபம் மின்ன.. நேவி ப்ளூ டீ ஷர்ட் போட்ட அழகான ஷக்தியைப் பார்த்து, கண்களில் காதல் மின்ன.. ப்ளாக் சூரியில் துப்பட்டா படபடக்க.. ஓர் இனிய பௌர்ணமி நிலவொளியில் சொல்லுவாள்.

அந்த இனிய தருணத்திற்காக .. கண்களில் கனவுகள் மிதக்க.. இப்பொழுதே ஏங்கத் துவங்கினர் இருவரும்.. ஆனால் இது புரியாமல், இன்னும் பூனா நோக்கியே தள தளவென போய் கொண்டிருந்தது அந்த மக்கு ரயில்.
----------------------------------------------------------------------


ஆகவே பெண்களே.. இச் சிறுகதை வழி நான் சொல்ல வந்தது என்ன வெனில்.. போனால் போகிறது... ஆண்களுக்காக இரக்கப் படுங்கள், உதவுங்கள்.. அல்லது வெறுமனே நட்புடன் பழகுங்கள்.. யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லைக் கோடுகளை உங்களுக்குள் வரைந்துக் கொள்ளுங்கள்.. அந்தக் கோட்டினை கடக்காமல், சமூகத்தின் பார்வையில் கேள்விக் குறிகளை எழுப்பாத வகையில் நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்.. உங்களது மன நிம்மதியையும், கம்பீரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. சரிதானே?

எல்லா நிலாக்களுக்கும் இதுபோல, பூனா வரைக்கும் டிக்கட் எடுத்து பின்னாடியே துரத்தி துரத்தி லவ் பன்னும் ஷக்திவேல்கள் அமைவது கடினம் அல்லவா?

நிலாவின் நிறைவு பௌர்ணமி தானே?





21 comments:

அருள் குமார் said...

என்னங்க பத்மா...இப்படி பண்ணிட்டிங்க. எப்படி இந்த கதை முடியக்கூடதுன்னு நினைச்சமோ அப்படியே முடிசிட்டிங்களே!! வெறும் வெட்டி வம்பு பேசுபவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து ஊரைவிட்டே ஓடிப்போகிறவளா இந்த நிலா? சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஸாரி. ஆமாம் இது சிறுகதையா என்ன?! எது எப்படி இருந்தாலும் உங்க எழுத்து நடை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அடுத்த கதையெல்லாம் இப்படி முடிக்கணுமேன்னு முடிக்காதிங்க. "நினைவுப் பெட்டகம்" மாதிரி ஒரு கதையை மீண்டும் எதிர்பார்க்கிறோம். நிஜமாகவே, அந்த கதையில் இருந்த உயிர்ப்பு இந்த கதையில் மிஸ்ஸிங்.

Dubukku said...

அருமையான நடை...நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இன்று தான் நிலா முழுவதையும் படித்தேன். முழு மூச்சில் முடித்துவிட்டேன். உயிரோட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

பத்ம ப்ரியா said...

ஹாய் பெண்மதி, ஹாய் அருள், ஹாய் டுபுக்கு..
நன்றி.. நன்றி.. நன்றி

ஆம் பெண்மதி ... தூரத்திலிருந்து பார்க்கும் நாம் .. நிலவிலுள்ள உயர் மலைகளை அதன் கறையென சொல்வதைப் போல.. நிலாவின் உயர் குணங்களை அவளது குறையென சொல்லிவிட்டனர்.

அருள்.. வேற எப்படி இந்தக் கதையை முடிப்பது? நிலா அறிவு பூர்வமான பெண் இல்லை.. உணர்வு பூர்வமாக செயலாற்றுபவள்... இந்த முடிவைத்தான் எடுப்பாள்.. ஷக்தியிடம் முதலிலேயே தன் காதலை சொல்லியிருந்தால் அவள் சென்னையை விட்டு போகாமல் இருந்திருப்பாள்..

உங்களது கருத்துக்கள் என்னை உக்குவிக்கின்றன.. நன்றி அருள்.

டமிள் ஸ்லாங் டுபுக்கு அவர்களே.. தங்களது கருத்துக்களும் என்னை மகிழ்விக்கின்றன.. உங்களது தமிள் சேவையை நான் தவறாது பயன்படுத்துவேன்.. அதி அற்புதமான தமிழ் வார்தைகள் அதில் காணப்படுகின்றன.

இப்படிக்கு
சி.செ.சி. ப

Dubukku said...

nakkals eh...
ennamo ponga..romba mahizhchi. :)

வீ. எம் said...

ஒரு வழியாக நிலா பவுர்னமியாகி முடிந்துவிட்டது .. மிக நன்றாக இருந்தது சி செ சி பி
//பூனா வரைக்கும் டிக்கட் எடுத்து பின்னாடியே //

அது என்ன பூனா? :)

பத்ம ப்ரியா said...

வணக்கம் பெருந்தகையீர்... ( ஹாய் வீ.எம்.ன்னு அர்த்தம்)
முதலில் ஒரு சின்ன கரெக் ஷன் என் பேர் சி.செ.சி.பி இல்லை சி.செ. சி.ப.. வேண்டுமானால் சி.செ.சி.ப.பி என இருக்கலாம்.

அடுத்ததாக.. கதையை டைப் செய்யும் போது எளிதாக இருக்க பூனா, கோவா, என சிறிய பெயர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது நல்லதல்லவா?

ஹிமாசல் ப்ரதேசம், புதுக்கோட்டை, ஹைதராபாத், அம்பாசமுத்திரம், அருணாசலப்ரதேசம், அரக்கோணம் என நீண்ட பெயர்களை தேர்ந்தெடுத்தால் கதையில் கதையில்லாமல் வெறும் பெயர்தான் இருக்கும்.

பேர் சொல்றமாதிரி ஒரு கதை எழுதனும்னு எனக்கும் ஆசைதான் .. அடுத்த கதைல ட்ரை பன்னிடறேன் வீ.எம்

சரி.. அது என்ன வீ. எம்..??? :)

வீ. எம் said...

//வணக்கம் பெருந்தகையீர்... ( ஹாய் வீ.எம்.ன்னு அர்த்தம்)//

ஏற்கனவே விளக்கம் தந்துட்டீங்க சி செ. ஆகையால் புரிந்துக்கொண்டேன்..

சி செ சி ப(பி, ப பி) எல்லாம் உங்களுக்குத்தான்.. அவரவர் விருப்பம் போல் கூப்பிடலாம்..
சி செ சி மட்டும் மாற்றக்கூடாது.. !

//என சிறிய பெயர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுவது நல்லதல்லவா?//

சி செ வின் வாயால் இப்படி ஒரு சிறுகதை TIP கேட்கவேண்டும் என்றே இந்த கேள்வியை எழுப்பினேன்.. :) நல்ல விளக்கம்.. நன்றி
அதில்லாமல்,. சமீபத்தில் தான் அலுவலக விஷயமாக 1 மாதம் பூனா போய் வந்தேன் அல்லவா.. அதுவும் ஒரு காரணம்..

திருவண்ணாமலை, திருத்துறைப்பூண்டி, திருநின்றவூர், வாலாஜாபாத், பூவிருந்தவல்லி - இவைகளையும் தவிர்த்துவிடுங்கள்.. :)

//பேர் சொல்றமாதிரி ஒரு கதை எழுதனும்னு எனக்கும் ஆசைதான் .. //
உங்கள் அடுத்த கதையின் நாயகி பெயர் பத்மபிரியா என வைத்து, அதை தலைப்பாகவும் வைத்துவிடுங்கள்..

//சரி.. அது என்ன வீ. எம்..??? :) //

நீங்க மட்டும் ஈசியா எழுத வசதியா சின்ன ஊரா வெச்சுக்கலாம், என் பெரிய பெயரை சுருக்கி வீ எம் னு வெச்சுக்க கூடாதா?? :)

பத்ம ப்ரியா said...

ஹாய் ஆனந்த்

உங்களின் கருத்துப் பதிவு மிகவும் உற்சாகத்தை தருகிறது.. நன்றி.. தேங்க்ஸ், தேங்கா மட்டை எல்லாம் உரித்தாகுக. இது வரைக்கும் 5 சிறு கதைகள்தான் எழுதி இருக்கேன்.. இன்னும் 5 சிறு கதைகள்(!!!!!!?????) எழுதிட்டு புக் வெளியிடலாம்னு இருக்கேன்.. அதுக்குள்ள சுனாமி வராம இருக்கனும்.

ஹாய் வீ

நீங்க பூனா போயிருந்தீங்கன்னு தெரிஞ்சிருந்தா.. புனா ங்ற பேரையே யூஸ் பன்னாம நிலா சுங்குவார்சத்திரத்துக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஷேர் ஆட்டோவின் அழுக்கு ஜன்னலோரமாய் அழுகையுடன் அமர்ந்திருந்தாள் என எழுதி இருப்பேன்..முடிஞ்சா ட்ரை பண்ணி இந்தியா மேப் ல இருந்தே பூனாவை எடுத்திருப்பேன்..ரொம்ப லேட்டா சொல்லிட்டீங்க. உங்கள் சீர்மிகு கருத்துக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன் வீ.

வீ. எம் said...

ஹாய் சி செ ,
நலமா? நான் சொன்ன மாதிரி கதை எழுத தொடங்கிட்டீங்களா?

//ஹாய் வீ//
ரொம்ப சுருக்கிட்டீங்க .. !

பத்ம ப்ரியா said...

ஹாய் வீ,
புது சிறுகதை இப்பத்தான் எழுத துவங்கி இருக்கிறேன்.. பெருந்தகயீரே... . விரைவில் ப்ளாகிடப்படும்.. ஓ.கே யா?

வீ. எம் said...

DOUBLE OKAY S S S P

வீ. எம் said...

SSSP,
romba periya kadhaiyooo??? yosichu yosichu .........................
VM

பத்ம ப்ரியா said...

ஹாய் வீ.எம்

நீங்க மட்டும்தான் பூனா போகமுடியுமா.. நானும் மதுரை போயிருக்கேன்.. ஸோ.. அடுத்த கதை லேட் தான் ஆகும்.. ஓ. கே யா?

வீ. எம் said...

ok , unga kadhaiku madhurai la irundhu nalla karu eduthu vaanga

வீ. எம் said...

TODAY POWRNAMI! :)

வீ. எம் said...

உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

பத்ம ப்ரியா said...

ஹாய் வீ.எம்... ஹாய் கலை

தங்களது விமர்சனங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி.

திரு. வீ.எம் அவர்கட்கு

தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி.. புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ம்.. அடுத்ததாக .. கலை..
தஙளது கருத்துப் பதிவு என்னை உற்சாகப் படுத்துகிறது.. நானும் தங்களது வலைபதிவுகளை படித்துவிட்டு எனது கருத்துக்களை பதிக்கின்றேன்..சரியா?

அருள் குமார் said...

என்னங்க மேடம், ரொம்ப busy-யா? எப்பொ அடுத்த கதை எழுதப்போறிங்க? wait-பண்ணிட்டு இருக்கோம்ல. சீக்கிரம் எழுதுங்க.

Arvind said...

interesting!!

Gayathri Chandrashekar said...

Tngaludaya indha kadhai yenakku migavum piditthadhu.Pirai nilavaai thodangum kadhaiyai Paurnamiyil muditthulleergal Azhagaaga,Aazhamaaga!

விசு said...

ஏனுன்க பத்மப்பிரியா,


இன்னைக்கு தான் உங்கழுடைய வலைப்பூ பார்த்தேனுங்க‌... படிக்க
நல்லா இருந்ததால‌ முதலில் இருந்து படிந்தேனுங்க‌...

'பயணங்கள் முடிவதில்லை (தேடல்)', 'நினைவுப் பெட்டகம்', 'நிலா' & 'மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன'...

ஒவ்வோன்னும் அருமையா இருக்குதுங்க... நன்றாக உயிரோட்டத்துடன் எழுதியிருந்ததால், முழு மூச்சில் எல்லா பதிவையும் முடித்துவிட்டேனுங்க‌.


//இந்தக் கதையும் ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்படுகிறது .//

உன்மையாகவே உள்ளத்தை உருக்கத்தான் செய்கிறது.

வாழ்த்துக்கள்.