Sunday, April 30, 2006

நூல்.. நூலே நீ...!!!!

உரத்த உரையாடல் நமக்குள்
ஆழ் நிலை மௌனம் வெளியில்

எப்போதும் நீயே பேச
தவறாது நானே கேட்க
மீற இயலாத ஒப்பந்தம்- நமக்குள்

காதலை கற்பிக்கிறாய்
காமத்தையும்தான்

அழுதும் தீராத
ஆழ்மன சோகத்தை
அத்யாயமாக்குகிறாய்

சோகப் புதைகுழியில்
சோர்விக்கிறாய்

என் கோபம், தாபம்
நகைத்தல், கதைத்தல்
எல்லாம் உன்னோடு

விரல்கள் உன்னை தழுவ
கண்கள் உன்னை வருட - என்
நினைவு முழுதும் நீ

உன்னுடனான என் தனிமை
எனக்கென்றும் இனிமை

ஒவ்வொரு தனிமையிலும்
உன்னைப்போல்
இன்னொரு நண்பன்

கோபிக்காதே...
உன்னில்தானே எழுதப்பட்டிருந்தது

ஒவ்வொரு நல்ல நூலும்
ஒரு நல்ல நண்பனென்று.

6 comments:

Raghavan alias Saravanan M said...

ஹலோ பத்மப்பிரியா,

மிகவும் அருமையான வரிகள். நல்ல நூல்கள் எப்போதுமே ஒரு நல்ல நண்பனாக மட்டுமே நின்று விடுவதில்லை.

சில சமயங்களில் வரைமுறைகளைத் தாண்டிய உறவுமுறையினை உள்ளூர நட்டுச் செல்லும் நல்லதோர் களஞ்சியமாய்த் திகழ்கின்றன.

சரியா தோழி?

வாழ்த்துக்கள். மென்மேலும் நிறைய எழுதுங்கள்.

தோழமையுடன்,
மு. இராகவன் என்ற சரவணன்.

[பின்குறிப்பு: இது தான் நான் முதன்முதலில் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பும் விமர்சனம். இது எவ்வளவு தூரம் இங்கு அத்தியாவசியம் எனத் தெரியவில்லை. இருப்பினும், சொல்ல வேண்டும் என்று தோன்றிற்று.]

Gayathri Chandrashekar said...

Nice lines having depth of thought in it..Noolgal mattum nanbargal alla, nool nanbargaludan, valaipadhivu thozhamaiyum serndhukondadhaal aanandhame!

அருள் குமார் said...

கவிதை நன்று. எனினும், உங்களின் தொடர்கதையைத்தான் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் பிளாகிடுங்கள்.

பிரதீப் said...

Agmark Padma priya poem! too good!

chokku said...

உங்கள் கவிதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

முல்லை அமுதன் said...

nalla kavithai.
puthiyavakalai emakkum arimukam cheyungkalen.
vaazhthukkaludan.
ivan,
http://kaatruveli-ithazh.blogspot.com/