Friday, May 12, 2006

ம.. தி.. நிச்சயிக்கப் படுகின்றன- அத்யாயம் 2

"ஆபிஸுக்கு சைக்கிள்ள போ.. நாலு ஸ்டாப்பிங்குக்கு எதுக்கு பஸ்ஸு? "..மத்யானம் ஆபீஸ் கான்டீன்ல சாப்ட்டுக்க..சப்ஸிடிய எதுக்கு வேஸ்ட் பன்ற?-

எல்லாம் அப்பாவின் ஆணை. காலையில் எழுந்து ஓடி ஆடி என்னதான் சுவையாக சமைத்தாலும் அதை சாப்பிடும் பாக்கியம் அவளுக்கு இருந்ததில்லை. காலையில் எலுமிச்சம் பழச் சாறு.மதியம் வாயில் வைக்க வழங்காத கான்டீன் உணவு.

காபி குடித்து முடித்ததும் அந்த டம்ளரை டேபிள் மீது வைக்காமல் வேண்டுமென்றே லாப்ட்டில் வைத்துவிட்டு போகும் தம்பி. பாத்திரம் விளக்கும் போது ஸ்டூல் போட்டுத்தான் எடுப்பாள். இதையெல்லாம் கேட்டால் பெரிய சண்டையாகும், “ காலா காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பு.. வேலைக்கு போனாலே திமிரு ஜாஸ்த்தியாய்டும்” என்று கூறும் உறவு வட்டங்கள்.

“ எனக்கு கல்யாணமே வேணாம்பா.. நான் இப்டியே இருந்துடறேம்பா..”

“ எவனையாவது லவ் பன்றயா? அப்டி ஏதாவது இருந்தா செருப்பு பிஞ்சிடும்”

“ அப்டியெல்லாம் எதுவும் இல்ல.. ஆனா இப்ப பார்த்த மாப்பிள்ளை குள்ளம்பா”

வற்ற எடத்தையெல்லாம் தட்டிக் கழிச்சுட்டே இருக்கா.. வேற என்ன விஷயமோ என்னவோன்னு “ எதிர்வீட்டு தாமோதரன் கூட கேட்டாரு

“ அவர் அப்டித்தான் கேப்பாரு.. ஏன்னா அவங்க மிஸஸ் அவரை விட முக்கால் அடி உயரம் ..அவங்க எவ்ளோ வருத்தப் படறாங்கன்னு எனக்கு தெரியும்”

“இந்த வாய்தான் உனக்கு நல்லது எதுவுமே நடக்க விடாம செய்யுது”

இந்த மாதிரி கல்யாணம்தான் எனக்கு நடக்கபோற நல்லதா?

“ அப்பாவோட உடம்பு கன்டிஷன் தெரிஞ்சுதான் பேசறியா? உன்னாலயே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்.. அவ்ளதான் நான் சொல்லுவேன். சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா”

இருபது வயது கூட நிரம்பாதவன்.. டிப்ளமோ அரியர்ஸ் வைத்துவிட்டு வெட்டியாய் ஊர் சுற்றுபவன்.. வீட்டு வேலைகளை சிறிதளவு கூட பகிர்ந்து கொள்ளாதவன் – குற்ற உணர்வு ஏதுமின்றி மிரட்டுகிறான்.. அவனை விட நான்கு வயது பெரியவள்.. தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

படிப்பு - தன்னம்பிக்கையையும், பொருளாதாரம் - தைரியத்தையும் தந்துவிடும் என்பது கற்பனை. தன்னம்பிக்கையை திமிர் என்றும், தைரியத்தை அடங்க பிடாரித்தனமெனவும் பெயரிட்டு ஆவேச கூச்சல் போடும் ஆண்வர்கம் வீட்டை ஆளும் தேசமிது. அவர்களது ஆட்சியில் பெண்கள் கொத்தடிமைகள்தான்.

சொந்த பந்தங்களோ,வழியில் பார்ப்பவர்களோ, அலுவலக நண்பர்களோ - பொழுது போகாமல்.. பேச வேறு விஷயம் இல்லை என்றவுடன் “ பவிக்கு எப்போ கல்யாணம்.. .. இன்னும் பார்த்துண்டு இருக்கீங்களா? என்ற ஒரு கேள்வியை போகிற போக்கில் கேட்டுவிட்டு போய்விடுகின்றனர். ஒரே நாளில் நாலு பேராவது இப்படி கேட்கும் போது ப்ரச்சனையின் தீவிரம் அதிகரிக்கின்றது.

இந்த தொல்லைகளில் இருந்து விடுபட.. கண்ணை மூடிக்கொண்டு இந்த இடத்தையே ஏற்றுக் கொள்ளலாமா? தற்கொலை செஞ்சுக்கலாமா? தற்கொலை செஞ்சுக்க அசாத்திய தைரியம் வேணும்..

அலுவலக தோழிகள் அனைவருக்கும் நல்ல நல்ல வரன்கள் அமையும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது... அப்பா, தம்பி திட்டுவதைப்போல நான் அதிர்ஷ்டம் இல்லாதவளோ.. இருந்தாலும் இந்த இடத்தை சரியென்று சொல்ல மனம் உடன்படவில்லை.

“ இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா.. நல்ல இடமா அமையும்ப்பா?

“ எனக்கு ஒன்னும் இல்ல.. நீயும் உன் தம்பியும் போட்டுக்கற சண்டையில.. நான் நிம்மதியா இருக்க முடியல.. நான் பேசாம முதியோர் இல்லம் போய்ட போறேன் .. அப்புறம் நீங்களா பார்த்து ஏதாச்சும் பண்ணிக்குங்க”

“ஆபீஸ் ப்ரண்ட் கல்யாணத்துக்கு மொழி எழுதக் கூடாதுங்கறான்.. எதிர்த்து கேட்டா தண்ட செலவு பண்றேன்னு என்னையே திட்டறான்.. நான் திருப்பி கேட்டா சண்டை”

“ஆமா.. ஒரு மாசத்துல எத்தன கல்யாணம்..? எத்தனை தடவை ஐம்பது நூறுன்னு அழறது?

விக்கித்து நின்றாள். “ முழு சம்பளத்தையும் பே ஸ்லிப்போட தந்துடறேனேப்பா.. மொழி எழுதலைன்னா ஆபீஸ்ல கேவலமா பார்ப்பாங்கப்பா” - என சொல்ல நினைத்து, பயத்தால் சொல்லாமலே விழுங்கி விட்டாள்.

“ டேய்.. டேய் .. நில்லுடா..இந்தா.. இந்த நூரு ரூபாயை வச்சுக்கோ.. க்ரிக்கெட் ஆடிட்டு திரும்பி வர லேட்டானா.. ஆட்டோலயே வந்துரு... உன் ப்ரண்ஸ்க்கு ஏதாச்சும் வாங்கி தா.. அவங்க கையையே எதிர்பார்க்காதே” – பள்ளி நண்பர்களோடு க்ரிக்கெட் விளையாடுவதற்காக புற நகர் பகுதியிலிருந்து சென்னைக்கு கிளம்பும் மகனுக்கு,வாரத்தில் மூன்று முறையாவது இவ்வாறு பணம் தந்து அனுப்புவது பவித்ராவின் தந்தையின் தலையாய கடமையாய் இருந்தது. பவித்ராவால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஒப்பிடலில் தனது தந்தை செய்யும் ஓரவஞ்சனை புரிந்து அழாமல் இருக்க முடியவில்லை.

------------------------------------

“ நந்தினி.. பேசாம இந்த இடத்தையே சரின்னு சொல்லிடட்டா.. இதுதான் எனக்கு விதிச்சிருக்குன்னா நான் போராடி என்ன பயன்?

“ என்னடி இது...!? ஈக்வல் ஹைட் இருந்தா கூட பரவாயில்ல.. உன்னை விடவும் ரொம்ப குள்ளம்.. சரியா வரும்னு எனக்கு தோணல”

“ எனக்கு துளி கூட பிடிக்கல நந்து..ஆனா அப்பா, தம்பி டார்ச்சர் தாங்க முடியல.. வீட்ல எப்பவும் சண்டை தான்.. வீட்டு வேலையும் செஞ்சு.. ஆபீஸ் வேலையும் செஞ்சு.. வம்பு சண்டைக்கு வந்தாலும் வாய் தொறக்காம இருந்து.. எனக்கு த்ரானி இல்ல நந்து.. தினம் தினம் நான் தூங்காம,சத்தம் போடாம தலையணைல முகம் புதைச்சு அழறது எனக்குத்தான் தெரியும்”.

“ இந்த பையனை விட.. போன தடவை வந்த இடமே பெட்டர்.. கால்தான் விந்தி.. விந்தி நடந்தான்.. நல்ல கலர்.. ஹைட் வெயிட்டா..முகம் கூட அழகா இருந்துச்சு”

“ அந்த இடமே திருப்பி கேளுங்கப்பான்னா.. அப்பாக்கு ஈகோ ப்ராப்ளம்.. அவன் கால்ல போய் விழ சொல்றியா என்னைன்னு?” கத்தறாரு

" எதிர் நீச்சல் படத்துல பாலசந்தர் ஒரு வசனம் வச்சிருப்பார்.. ஜெயந்தியோட அம்மா ஜெயந்திக்கு எப்டியாவது கல்யானம் செஞ்சு அனுப்பிடனும்னு தவிப்பாங்க.. அதுக்கு அவளோட அப்பா “ என் வீட்டுக்காரியோட தலைவலி, திருகுவலி என் பொன்னோட வாழ்க்கையை தீர்மானிக்க கூடாதுன்னு" சொல்லுவாரு.. ஆனா இங்க உங்க அப்பாவே இப்படி இருக்காரு.. கொஞ்சம் வெயிட் பண்ணா நல்ல இடமா வரும் பவி”

“ இதத்தான் நானும் சொன்னேன்.. யாரையாவது லவ் பண்றியான்னு கேக்கறாங்க ரெண்டுபேரும்.. செத்து போய்டலாம்னு தோணுது”

“ப்ச்.. உன் அழகுக்கும் பொறுமைக்கும் .. உங்க அம்மா இருக்கும் போதே நல்ல இடமா பார்த்து முடிச்சிருக்கலாம்.. நாத்தனார் இருக்க கூடாது.. மாமியார் நல்லவளா? பையன் டாக்ட்டரா இருக்கனும், இஞ்சினீயரா இருக்கனும்னு செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணியே உன்னை கவுத்துட்டு போய்ட்டாங்க”

" நேத்து அத்தை வந்திருந்தாங்க நந்தினி"

" என்னவாம்..?"

.. சுமதிக்கும் இடம் அமைஞ்சிடுச்சாம்.. பேசி முடிக்க அப்பாவ வந்து கூப்ட்டாங்க”

“என்னது...!? சுமதிக்கா.. ? பதினேழு வயசுதானே ஆகுது அவளுக்கு? அவ அக்காக்கே இப்பத்தானே ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு”?

“ இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு நந்தினி.. அப்பாக்கு திடீர்ன்னு எதாவது ஒன்னு ஆயிருச்சுன்னா..? நாங்க ரெண்டு பேர் என்ன செய்றது..? ஏதோ ஒன்னு.. என் தலையெழுத்து படி நடக்கறது நடக்கட்டும்”

தன்னைவிட சின்னவளுக்கு திருமணம் ஆகிறது என தெரியவந்தால்..மறை முகமான அந்த அதிர்ச்சியில்.. மன அழுத்தத்தில் – பவித்ரா இந்த இடத்தியே முடிக்கச் சொல்லுவாள் என எதிர்பார்த்து அவளது அத்தை விரித்த வஞ்சக பொய் வலை அது. அப்படி வலை விரிக்கச் சொன்னது அவளது அப்பாவேதான் என்பதும் கடைசி வரை பவித்ராவுக்கு தெரியாது.

.... தொடரும்..

17 comments:

Gayathri Chandrashekar said...

Hi Padma Priya,
Your story is thrilling.I cudn't connect the title with the on coming episodes..pls write it soon..

Off topic
Thanks for your comments upon my poem..

பத்ம ப்ரியா said...

Thanks Gayathri

your comments are encouraging me. I am writting the next episode..at the earliest i will blog it..

Raghavan alias Saravanan M said...

Hi Padmapriya,

thought of commenting it in english as i m not completely used to type the unicode font..

is it also based on some real incidents priya?

well, i would say you are trying to portray almost all HUMAN BEINGS in the middle class families..

Of course, there are some relaxations as each and everything in the world has got its own exceptions..

hm.. lemme just wait for all the episodes so as to get the full intention of yours.. but its in a good flow.... continue dude..

you are so good in making the viewers/readers keep their fingers crossed and tight!!! great!

best wishes...

Raghavan alias Saravanan M said...

forgot to tell you..

i guess by mistake you have used the word மொழி instead of the actual term மொய்

aint i?

பத்ம ப்ரியா said...

Hi Saravanan
Thanks for your comments.
I think mozhi is correct.. because
அன்பளிப்பு அளிப்பவரின் பெயரை சபையின் நடுவே மொழிவதே " மொழிதல்" என்னும் வழக்கம் ஆயிற்று. நாளடைவில் மருவி மொய் ஆகியது.
Thakyou.

Prasanna said...

உண்மையிலயே மிடில் கிளாஸ் பொண்ணுங்க வாழ்க்கை இப்படித்தான் இருக்கு. அப்புறம் அந்த தம்பி மேட்டர் இல்ல, உண்மையிலுன் உண்மை. கால் காசுக்கு லாயக்கில்லாதவன் கம்ப்யூட்டர் இஞ்ஜீனியர் அக்காவ கண்டபடி திட்டுவான். அது ஒரு மாதிரி தாழ்வு மனப்பான்மை. பல பேர் வீட்ல தெரிஞ்சே இத அனுமதிக்குறாங்க. உண்மைலயே பவித்ரா நிலை பாவம் தான். அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன். நல்லா எழுதுறீங்க.

Prasanna said...

தயவு செய்து மறுமொழி மட்டுறுத்தல் நிறுவுங்க, அது எப்பவுமே நல்லது

Raghavan alias Saravanan M said...

hi pp,

is that so? neways tx for letting me the correct word..

hey priya, i have started converting my poems into unicode and they are into my blogs .. its in progress...

if you get time, visit the blog @ http://kavithaikealungal.blogspot.com/

jokes in tamil related blog @ http://vaaivittusiriththaal.blogspot.com/

some other blogs are in progress.. wil let you knwo once i m done .. ex.. http://thiraippadap-paadal-varigal.blogspot.com/ => all tamil film songs related..[in construction]

பத்ம ப்ரியா said...

Hi prasanna and Hi saravanan
thanks for your comments. Facts are always intresting than the imaginations. This story is based up on a real life.

Then MaRumozhi MattuRuththal.. i have to register with tamilmanam.

Saravanan .. creating a blog for poem and jokes are correct. But for lyrics of tamil songs are already available in http://www.mohankumars.com and some other sites.. y r u doing the same work..?
Bye - M. padmapriya

Raghavan alias Saravanan M said...

Hi PP,

nice to hear from you.. yeah i do agree..

dont mistake me if i gonna ask you a question.. there are so many blogs for poems and stories in tamil.. why you are creating 1 of your own!?

the same holds good here priya.. something which is done by us gives a great satisfaction.. this habit is been there for years in me... moreover there are so many songs lyrics i have typed in the tamil typewriting fonts...but now i m changing them into unicode...

hope u dint mistake and misunderstand...

Raghavan alias Saravanan M said...

prasanna,

marumozhi matturuththal endran ennavo? priya is it like referring?

சிங். செயகுமார். said...

பிரியா மனச எண்ணமோ பண்ணுது போங்க .நிஜங்களை அப்பிடியே படம் புடிச்சிடுரீங்க!

அருள் குமார் said...

ஹாய் பத்மப்ரியா. எனக்குத்தெரிந்தும் இப்படி சில உண்மை கதைகள் இருக்கின்றன. வீட்டை எதிர்க்க முடிந்தும் முடியாத பவித்ராவின் நிலை புரிகிறது. விரைவில் தொடருங்கள்.

//marumozhi matturuththal endran ennavo?//

சரவணன், comment moderation in blogger.com தான் மறுமொழி மட்டுறுத்தல். இபோதெல்லாம் போலியான பெயர்களில் அசிங்கமான பின்னூட்டங்கள் நிரைய வருகின்றன. எனவே நாம் பார்த்து அனுமதிப்பது நல்லது. "சிறகுகள்" இன்னும் தமிழ்மணத்தில் பதிவு செய்யப்படாததால் அந்த பிரச்சனை இப்பொது இல்லை என நினைக்கிறேன்.
அத்துடன் comment moderation செய்தால்தான் தமிழ்மணத்தில் feedback status காண்பிக்கப்படுகிறது.

Raghavan alias Saravanan M said...

நன்றி அருள்குமார்.

எனக்கும் இதே அனுபவம் ஏற்பட்டது இன்று. என்ன சொல்ல?

Raghavan alias Saravanan M said...

அருள்குமார்,

தமிழ்மணத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்....

பத்ம ப்ரியா said...

Hi Sing.Jayakumar, Hi Arul & Hi saravanan
Thanks from....
இசையை அருந்தி உயிர் வாழும் சாதக பறவைப் போல்
உங்கள்
கருத்தை அறிந்து கதை புனையும் காவிய பறவை - M. padmapriya
(enakkee konjam over thaannu thoonuthu)

Raghavan alias Saravanan M said...

கலக்கிப்புட்டீங்க போங்க....