"அப்பா.. இந்த இடத்தியே முடிச்சுருங்கப்பா.. "– தனது வாழ்க்கையின் அந்திமபயணத்திற்கான முடிவினை.. நெஞ்சம் வலிக்க.. தீனக் குரலில் சொல்லி விட்டாள்.
அவ்வளவுதான்..ஆரம்பித்துவிட்டனர் வேலைகளை..ஜம்பமாய் மூன்று நட்சத்திர ஹோட்டலில் மாலைப் பொழுதில் நிச்சய தார்த்தம்..வண்ண விளக்கொளியில் வாசனை திரவியம் தெளிக்கப்பட்ட ஏ.சி. ஹாலில் நலங்கு வைத்து நிச்சய தார்த்தம் முடிந்தது.
நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தனை உறவுகளும், நண்பர்களும் மாப்பிள்ளையை பார்த்ததும் விக்கித்து,பேச நா எழாமல் அமர்ந்திருந்தனர். சில பேர் சாப்பிட பிடிக்காமல் பவித்ராவின் அருகில் வந்து,சோகத்தை மறைக்கத் தெரியாமல் “ வரோம்மா..” என்று மட்டும் சொல்லிச் சென்றனர். உண்மையான சொந்தமெது போலியான பந்தமெது என்பதை புரிந்துக் கொண்டாள். எது புரிந்தால் என்ன..புரியாவிட்டால் என்ன.. அவள் வாழ்க்கை அஸ்தமிக்க துவங்கியது. அந்த இருளில் அவள் நிழலாகிப் போனாள்.
“ என்ன கோபாலன் இது...? பையன் ரொம்ப குள்ளம்.. பொன்னு வேற நல்ல ஹைட் வெயிட்டா இருக்கா..கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமில்ல..? – ஆத்மார்த்தமாய் பழகிய குடும்ப நண்பர் ஆதங்கபட்டு கேட்ட கேள்வியை எதிர் பார்க்கவில்லை அப்பா.. தம்பிதான் அவரை சாப்பிட அழைத்து செல்வதுபோல் விலக்கி கொண்டு சென்றான்.
“என்ணண்ணா இது.. நான் கிளம்பி வற்றத்துக்குள்ள இப்டி அவசரப் பட்டுட்ட..?
பூனாவிலிருந்து வந்த சித்தப்பா நிச்சயம் முடிந்த மறு நாள் கேட்ட கேள்விக்கு
“ பவித்ராவுக்கு பிடிச்சிடுச்சி..அப்புறம் என்ன..? நானும் சரின்னுட்டேன், நாள் நல்லாருக்குன்னு நிச்சயம் வச்சுட்டேன்..”
“ நான் வந்தப்புறம் முடிவு சொல்லியிருக்கலாம்ல..? சரி .. என்ன படிச்சிருக்கான்.. எங்க வேலை செய்யறான்.
"பி.ஏ. முடிச்சுட்டு..ஸ்கூல்ல வாத்யாரா இருக்கான்"
"என்ணண்ணா இது..? நம்ம பவி எம்.ஏ. சரி விடு படிப்பு வந்து என்ன செய்யப் போவுது... பையன் நல்லவனா இருந்தா படிப்பு முக்கியமா?சரி எவ்ளோ வருஷம் சர்வீசு.. என்ன சம்பளம்.. இங்க பக்கத்துல இருக்கற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமா? உனக்கு பக்கத்திலேயே பவி இருந்தா உன்னையும் பார்த்துப்பா"
“மண்ணடியில வடக்கத்திகாரங்க நடத்ற ஸ்கூல்ல வேலை செய்யறான்.. அவங்க பிரான்ச் இங்க இருக்கான்னு தெரியல..சம்பளம் என்னா..ஒரு ரெண்டாயிரம் தர்றாங்களாம்.. சாயந்திரம் வீட்ல டியுஷன் எடுக்கறானாம்"
தரையில் கால் நழுவுவதைப் போல் இருந்தது பவித்ராவுக்கு“ வாத்யாருன்னு சொன்னீங்களேப்பா..? ப்ரைவேட் ஸ்கூல்னு சொல்லவே இல்லயேப்பா? இரண்டாயிரம் தான் சம்பளமா? அதை வச்சு நான் என்ன குடும்பம் நடத்தறது?- அழுதபடியே கேட்டாள் சமையல் அறையில் இருந்து.
“ வாத்யாருன்னு நான் சொன்னேன்.. எந்த ஸ்கூல் வாத்யாருன்னு நீ கேக்கவே இல்ல..? ஏன் நீ சம்பாதிக்கற இல்ல? அது போதாதா..? கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்த எனக்கா தருவ?"
எவ்வளவு சாமர்த்தியமான பதில், வார்த்தைகளை வைத்து விளயாடும் லாவகம். துவண்டு போனாள்.. நிற்க முடியாமல்.. சுவரோடு தேய்ந்து தரையில் உட்கார்ந்தாள்..இறந்து போன தாயை நினைத்து அழுதாள்..அழுது கொண்டே சமைத்தாள்.. பத்து பதினைந்து விருந்தாளிகளுக்கு உணவிட வேண்டுமே.
“ அண்ணா.. இது என்னமோ என் மனசுக்கு சரியா படல.. அவன் படிக்கவும் இல்ல.. நிரந்தரமில்லாத ப்ரைவேட் வேலை.. வீட்டுக்கு கடைகுட்டி.. எட்டாவது பையன்.. சொத்தும் இல்லை.. எத வச்சு நம்ம பவியை நீ அவனுக்கு தரன்னு சொன்ன?’’
“ நீ சும்மா இருடா.. வயசு பொண்ணை வீட்ல வச்சுகிட்டு.. நெருப்ப மடில கட்டிகிட்ட மாதிரி இருக்கு”
“அதுக்காக ... அந்த நெருப்ப என் தலையில வச்சிட்டீங்களாப்பா..?- என கேட்க நினைத்து அழுகையோடு சேர்த்து அந்த கேள்வியையும் விழுங்கினாள்.
“ சரி..எவ்ளோ நகை கேட்டாங்க?“ அவங்க எதுவுமே கேக்கல.. நானா இருவது சவரன் போடறேன்னு சொன்னதும்.. உடனே சரின்னுட்டாங்க.
சரி என்றுதான் சொல்வார்கள்.. நல்ல திடகாத்திரமாக.. கவர்ன்மென்ட் உத்யோகத்தோடு..பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வீட்டுக்கு ஒரே பெண்ணாக..குள்ளமான தனது மகனை மணக்க ஒருத்தி வரும் போது..வேண்டாம் என்பார்களா?
“ அண்ணி சாவுபடுக்கைல கிடந்தப்போ.. பவிக்கு ஐம்பது சவரன் சேர்த்து வச்சிருக்கேன்.. நல்ல இடமா பாத்துமுடி தம்பின்னு சொல்லுச்சேன்னா..!???
“ அவ சொல்லிட்டு செத்துட்டா..இங்க நான் தானே பாக்கணும் எல்லாம். இருபது போடறேன்னதும் அவங்களே சரின்னுட்டாங்க. நிச்சயம் ஆனதும் அதுங்களுக்கே பேராசை தானே வந்துரும்...போதாத குறைக்கு நீயே சொல்லி குடுத்திறு”
பவித்ராவின் அம்மா அனைத்திலும் சரி சமமாக,எண்ணி எண்ணி சேர்த்து வைத்தாள்..இவளுக்கு ஐம்பது சவரன் என்றால் ..வரப்போகும் மருமகளுக்கும் ஐம்பது. அவற்றோடு அம்மாவின் நகைகளே ஒரு நாற்பது சவரன் இருக்கும். ஆனாலும் பவித்ராவிற்கென சேர்த்து வைத்திருந்ததில் முப்பது சவரனை நிறுத்திக் கொள்ளும் அப்பாவை என்ன கேள்வி கேட்பது? அப்படி கேள்வி கேட்டால் மட்டும் தந்து விடுவாரா?வாழ்கையே முடிந்து விட்டது.. பிறகு நகை எதற்கு..? பணம் எதற்கு.
“அதை விடு அண்ணா.. பையன் குள்ளமா இருக்கானே.. என்ன ஏதுன்னு விசாரிச்சியா? அவன் அண்ணங்க எல்லாம் நார்மலாத்தானே இருக்காங்க.. அப்பா அம்மா கூட நார்மல் ஹைட்டா இருக்காங்க... இவன் மட்டும் ஏன் குள்ளம்? கண்ணாடி அதிக பவர் இருக்கும் போல தெரியுதே?
“கடைசீ.. ஈவிடை பொறப்பு.. சத்து குறைச்சல்.. வேற ஒன்னும் இல்லடா..”
“இல்ல.. அவங்க குடும்பத்துல வேறயாராவது இப்படி குள்ளமா இருந்தா.. பரம்பரை பரம்பரையா ஏதாவது ஒரு புள்ளைக்கு அந்த வாகு வரும்னு சொல்வாங்களே.. அதை விசாரிச்சியா?
ஐயோ.. கடவுளே...இந்த திசையில் நான் சிந்திக்கவே இல்லையே? நாங்களிருவரும் வெளியே போனால் அனைவரும் கேலி பேசுவார்களே.. தன்னை இளக்காரமாகப் பார்ப்பார்களே என்று மட்டும்தான் இது வரை நினைத்து பயந்திருந்தாள்.. இப்போது.. பரம்பரை பரம்பரையாக அப்படி ஜீன் வருமா? என் குழந்தைகள் குள்ளமாக பிறப்பார்களா? ஐயோ.. நான் என்ன செய்வது? என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது.. யாருடைய கேலிக்கும் ஆளாகக் கூடாது.
“அப்பா என்னப்பா இது... இந்த ஆங்கிள்ள நீங்க யோசிக்கவே இல்லயாப்பா..? நாந்தான் சின்னவ.. எனக்கு எதுவுமே தோணல?“
"இன்னும் பத்தாம் பசலியாவே பேசிட்டு.. இப்போ எவ்ளவோ மருந்து மாத்ரைங்க வந்துருச்சு “ – என்றான் தம்பி.
“எத்தனை பொருத்தம் இருக்கு ஜாதகத்துல..?“
"ஜாதகம் இல்லன்னுட்டாங்க, நான் மெனகெட்டு மனசு தாங்காம பேர் ராசி மட்டும் பார்த்தேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு..மனசு நல்லார்ந்தா எல்லாம் நல்லா இருக்கப் போவுது”
அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு எழுந்த சித்தப்பா,
“சரி .. நான் கிளம்பறேன் அண்ணே.. பவி..சித்தி கிட்ட சொல்லி பெட்டி படுக்க எடுத்துட்டு வர சொல்லு” என்றார்.
"சாப்டுட்டு போங்க சித்தப்பா..ப்ளீஸ்"
சித்தப்பா மெல்ல அருகில் வந்தார்..இரண்டு கைகளால் பவித்ராவின் நெற்றியை அழுத்தி பிடித்தார்.. “ நல்லா இருப்பம்மா நீயி.." என்றார்.
சாப்பிடாமல் அப்பொழுதே புறப்பட்டு சென்ற சித்தியும் சித்தப்பாவும் இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.
இவளை பத்து வயது வரை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்த அந்த சித்தப்பா தன் கூடவே இருந்தால் ஆறுதலாயிருக்கும் என நினைத்தாள் பவித்ரா. முதன் முதலில் ஸ்கூல் வாசலில் இவளை விட்டுவிட்டு வெகு நேரம் கேட் அருகில் நின்றிருந்த சித்தப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவரின் கை விரல்களை பற்றிக் கொண்டு வயலுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. வளரவே வளராமல் ஸ்கூல் பிள்ளையாகவே இருந்து விட்டால் எவ்வளவு நிம்மதி, எவ்வளவு சந்தோஷம்.
தொடரும்...
34 comments:
Paavamaa irukku..Pavithra maadhiri eththanai pero...innum eththanai episode irukku adhai sollunga mudhalil..
//இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.// அய்யய்யோ... அப்போ கல்யாணம் முடிஞ்சிடுச்சா?! :(
Hi Gayathri & Hi Arul
உண்மையாகவே நீங்கள் இருவரும் இவ்வளவு ஒட்டுதலாக இந்தக் கதையை படித்து கருத்து பதிவிடுதலை பார்க்கும் போது என் நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது காயத்ரி..
அருள் உண்மைகள் எப்போதும் உள்ளத்தை உருக்கத்தான் செய்கிறது. இந்தக் கதையும் ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்படுகிறது .
எனது பணிச்சுமையினால் நான் தான் உங்களது வலைபதிவுகளின் பக்கமே வருவதில்லை, இந்தக் கதையையும் மெதுவாக எழுதுகிறேன். மன்னிக்கவும்.
இன்னும் 2 அல்லது 3 அத்யாயங்கள் வரும் காயத்ரி. தேங்ஸ்பா..வர்ட்டா
M.padmapriya
பத்மா, உங்க inspiration - ல் நானும் ஒரு தொடர்கதை எழுத முடிவெடுத்திருக்கிறேன்! (ஆனால் உங்களை விட மெதுவாகத்தான் எழுதமுடியும்) எனவே இனி என் பதிவுக்கு வரும் முன் சற்று யோசித்துக்கொள்ளுங்கள்!
பத்மப்பிரியா,
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. காயத்ரி, அருள்குமார்
வரிசையில் நானும் ஒருவனே...
என்னங்க நீங்க... ஒரே சோகமா உருக்கிப் பிழியறீங்க...அப்படின்னு எல்லாம் கேக்க மாட்டேன் நான்...
நீங்கள் பிரம்மா.. எழுதும் போது தங்கள் எண்ணச்சிறகுகள் எந்தத் திசையில் பயணிக்கையில் தங்களுக்கு மகிழ்வு வருகிறதோ அதை நீங்கள் எழுதுகிறீர்கள்..
மேலும் இது முற்றிலும் யதார்த்தத்தைத் தழுவிய கதை.. எனவே... உங்களுக்கு ஒரு சபாஷ்....
அருள்குமார், தங்களின் வரிசையில் நானும் இருக்கிறேன்.. கதைக்கான கரு தயார்.. ஆனால் ஆயத்தப்பணிக்கான நேரம் இன்னும் சிக்கவில்லை...
வாழ்த்துக்கள் பிரியா,
இராகவன்.
[பின்குறிப்பு: பவித்ராவிற்காக என் மனது பாவப்படுகிறது, ஆதரவு தருகிறது, அவர் அப்பாவை நன்றாக நாலு கேள்விகள் கேட்கலாம் போல் தோன்றுகிறது, தம்பிக்கு நல்ல புத்திமதிகளைக் கண்டிப்புடன் சொல்லலாம் போல் இருக்கிறது.
இதையெல்லாம் இப்ப சொல்றீங்களே சரவணன் என்று அருள்குமாரும், பிரியாவும் சொல்வது என் காதில் கேட்கிறது.. என்ன செய்வது.. இதுவும் என் உணர்வுகளின் வெளிப்பாடு தான்]
Hi Padmapriya,
Kalki siru kadhai potti arivichchirkanga..Nalla kadhai ezhudhareenga..Try panungalen.Last date june 15th.arimuga ezhuththalarukku sirappu parisaam!
hi S S S P P : How are you.. story is going good.. continue and come with your next episode very soon
VM
My heartiest thanks to Arul, gayathri, saravanan, and VM
I am writting the next episode.. soon it it will be published.
Thanks gayathri.. i will try my best to participate in kalki story competition. Are u preparing for that competition?
I am fine, How are u VM ..and thanks for your comment -SSSPP
M. Padmapriya
உங்க கவிதைகளை விட கதைகள்
[குறிப்பாக ம.தி.நி] உணர்வு பூர்வமாக
உள்ளன
Ungal kadaigal athanaiyum etharthamaga irukiradu.
seekiram mathadayum pottudunga.
Hi karthick
I am typing the next episode.. i will blog it soon. And thanks for your comment. I had visited your blog, your writtings are also so good.. keep it up.
M. Padmapriya
Mikka nandri padma.
-karthic
முதல் பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் இடையில் இவ்வளவு
இடைவெளியா?
ம.தி.நி-3 மே 23
இன்று ஜூலை 29
என்னங்க ஆச்சு?
பத்மப்பிரியா... என்னங்க நீங்க.. இருக்கீங்களா இல்லையா?
நீங்களும் கடுமையான வேலைப்பளுவில் இருக்கீங்களா.. என்னை மாதிரி?
ஒவ்வொரு தடவை தங்கள் வலைப்பூவைப் பார்வையிடும் போதும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தால் இந்நேரம் பின்னூட்டங்களாலேயே நிரம்பி வழிந்திருக்கும் உங்கள் வலைப்பூ.....
நலமாயிருப்பாய் என்று பலமாய் நம்புகிறேன் தோழி....
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
Hi Priya,
Excellent story line. Your thought process seems to be a gift from the God. I like to blog in Tamil but I dont have the wherewithals to do that, so I have created a blog in English. It wont be original and fantastic as yours is, but still if u have time, u can visit the blog at http://paradise-within.blogspot.com/. Thanks a lot. Keep writing. God bless.
ப்ரியா...
இருக்கீங்களா? என்னங்க அம்மணி ஆளையே காணோம் ரொம்ப நாளா?
ப்ரியா.. என்னங்க ஆனீங்க நீங்க?
இருக்கீங்களாஆஆஆஆஆஆஆஆ?
ஏனுன்க பத்மப்பிரியா,
இன்னைக்கு தான் உங்கழுடைய வலைப்பூ பார்த்தேனுங்க... படிக்க
நல்லா இருந்ததால முதலில் இருந்து படிந்தேனுங்க...
'பயணங்கள் முடிவதில்லை (தேடல்)', 'நினைவுப் பெட்டகம்', 'நிலா' & 'மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன'...
ஒவ்வோன்னும் அருமையா இருக்குதுங்க... நன்றாக உயிரோட்டத்துடன் எழுதியிருந்ததால், முழு மூச்சில் எல்லா பதிவையும் முடித்துவிட்டேனுங்க.
//இந்தக் கதையும் ஓர் உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்படுகிறது .//
உன்மையாகவே உள்ளத்தை உருக்கத்தான் செய்கிறது.
வாழ்த்துக்கள்.
ப்ரியா,
இன்னைக்கும் தேடிவந்து ஏமாந்து போனேனுங்கோ...
என்னங்க பண்றீங்க. சீக்கிரம் வாங்க...
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
திஸ் இஸ் டூ மச்....
ஒவ்வொரு பின்னூட்டங்களிலும் தேதி தெரியும் வகையில் செய்திருக்கலாம் நீங்கள்..
என்னங்க் ப்ரியா.. நாங்க எல்லாரும் ம.தி.நி கதையைத் திரும்பவும் முதல்லருந்து தான் படிச்சுட்டுத்தான் உங்களோட அடுத்த பகுதியைப் படிக்கணும் போல இருக்கே?
அது சரி, நீங்க என்னங்க பண்றீங்க? ஏன் இவ்வளவு தாமதம்? உடல்நலத்தில் ஏதாவது குளறுபடியா? வேலைப்பளுவா?
சீக்கிரம் வந்து அடுத்த இன்னிங்ஸ்-ஐ ஆரம்பிங்க..
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன்.
27 பிப்ரவரி 2007, செவ்வாய் 1:45 PM
ப்ரியா,
ஒரு 10 attendance entry சேத்துக்கோங்க இதோட...
எப்ப வருவீங்க நீங்க?
ப்ரியா,
உள்ளேன் அம்மா...
உங்கள் கதை எனக்கு மெத்தப் பிடித்திருக்கிறது. வாழ்துக்கள்....
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
பத்மப்ரியா,
என்னங்க ஆனீங்க? சீக்கிரம் வாங்க.. வந்து ஒரு கலக்கு கலக்குங்க!...
ஆவலுடன் எதிர்பார்த்து...
ungaludia blog supera erukku
i saw ur profile. so u visit my blog www.madhubalan.co.cc
ungaludia blog supera erukku
i saw ur profile. so u visit my blog www.madhubalan.co.cc
Hi Priya,
kathai nandraga irukkirathu. Vazththukkal.
Murugu.
Hi Priya,
Kathai nandraga irukkirathu. Vazththukkal.
Murugu.
hi
very good story
http://sankarkumarpakkam.blogspot.com/
அன்பார்ந்த இதயங்களே
இவ்வளவு நெஞ்சங்கள் எனது பதிவுகளுக்காக இங்கு வந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கின்றன என்பதை நினைக்கும் போது.. நான் பிறந்ததற்கும் ஓர் அர்த்தம் உள்ளது என புரிகிறது.
வேலை பளுவால் இச் சிறகுகளோடு இலக்கிய வானில் பறக்க இயலாமல் போனது.
இச் சிறகுகளின் படபடப்பினால் இலக்கிய தென்றல் இனி மெல்ல வீசும்
இப்படிக்கு
பத்மப்ரியா
:)
மிக்க மகிழ்ச்சி பத்மபிரியா உங்கள் பதிலைக் கண்டதும். இம்முறை நான் மிகத் தாமதமாகப் பதில் தெரிவிக்கிறேன்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
Thank you Saravanan, This is the first half of pavithra's life. Her next half is very sorrowfull.
Post a Comment