Wednesday, January 05, 2011

மீண்டும் வருகின்றேன்

இலக்கிய வானில் எழுத்துச் சிறகசைத்துப் பறக்க மீண்டும் வந்திருக்கின்றேன்.

2006
ஆம் வருடம் மே மாதம் 23 ம் தேதி ' மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன - அத்யாயம் 3' என்ற கதையினை(!!!!??) பதிந்திருந்தேன், இதோ இன்று 5.1.2011 அன்று மீண்டும் வந்திருக்கின்றேன்.

அன்றிலிருந்து இன்றுடன் சரியாக 4 வருடம் 7 மாதம் 12 நாட்களை சுவாசமின்றி வாழந்திருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.

(
இலக்கியம் இவங்களுக்கு உயிர் மூச்சாம் ....அதை சிம்பாலிக்கா
சொல்றாங்களாம் ... கணக்கு விவரமெல்லாஞ் சரியாத்தான் இருக்கு அம்மணி ஆனா உங்க பிளாக்கை படிச்ச அனைவரும் 108 ஆம்புலன்ஸ்ல உயிருக்கு போராடிட்டிருக்கறது தெரியாம எழுதிட்டிருக்கீங்களேம்மா.... என்று நீங்கள் கத்திக் கமறுவது குத்தி குமுறுவது எல்லாம் எனக்கு மனக்கண்ணில் தோன்றுகிறது. இதையெல்லாம் கண்டுகிட்டா என் வலைப் பூ எப்படீங்க கொலைப் பூ ஆகும்? !)

சக வலைப் பதிவ‌ர்கள் வெகு தொலைவில் பயணிக்கும் போது இந்த சின்னஞ் சிறு சிறகுகள் பறக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என தெரிகிறது.

( ‌
தெரியுதில்ல.. லேட்டா வந்துட்டோமுன்னு புரியுதில்லே ? லேட்டஸ்ட்டா என்ன எழுதி எங்க உயிரை வாங்க இருக்க? என நீங்கள் மிக மிக மிக மிக மிக ஆர்வமாக கேட்பது என் மனக்காதில் ஒலிக்கிறது.. (மனக் காதில் ஒலிக்கிறதா !? இன்னாமா இது !? என்று நீங்கள் கேட்டால் ... மனக்கண்கள் இருக்கும் போது மனக்காதுகள் இருக்காதா? .. கேள்வி கேக்கறத்துக்கு முன்னாடி யோசிக்கனுங்க)

எனவே மக்களே ..விரைவில் எதிர்பாருங்கள் ....அத்யாயம்-4

( 2012
ல் தான் (திரைப் படம்) உலகம் அழியறதா காண்பிச்சாங்க ..இங்க ... இப்பவே கண்ண கட்டுதே......! )

6 comments:

Karthik Kumar said...

nan romba naalave edhir pathukittu irukenga.. seekram kadhaya continue pannunga..

பத்ம ப்ரியா said...

Hi Karthik

I am writing the story. At the earliest I will blog it.

Thanks for your comment
M. Padmapriya

யாரோ said...

நல்வரவு ஆகுக....
கதை வெற்றிக்கும் வாழ்த்துக்கள்

யாரோ said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

ஏங்க! எவ்ளோநாளா பின்னூட்டத்துல வந்து கேட்டுகிட்டு இருந்தோம். இப்படியா பாதில ஒரு கதையை விட்டுட்டு போறது. அதவிட கொடுமை இப்போ வந்து அதையே கன்டினிவ் பண்றது. கதையே மறந்து போச்சுங்க. திரும்ப முதல் மூணு அத்தியாயத்தையும் படிக்கனும்!

Raghavan alias Saravanan M said...

Exactly. I repeat what Arun kumar said :)