Sunday, March 27, 2005

என் விருந்தாளி

சீராய் பெருக்கிய முற்றத்தில் - மீண்டும்
சின்னஞ்சிறு சிறகுகள்
இது அவற்றின் வேலை தான்.

முடிந்தவரை ஓரிரு சிறகுகள் - என்
முற்றத்து எல்லைக்குள் விழும்படி
கவனமாய் கோதி காற்றினில் அனுப்பும்
கூடத்து கண்ணாடியில் முகம் பார்த்து திரும்பும்.
சீவி சிங்காரிக்க என் வீடுதான் கிடைத்ததா ?

கோதுமை நிறத்தில் ஒன்று - மனைவி
அடர் நிறத்தில் ஒன்று - கணவன்
தம்பதியர் தங்க தடை ஏதுமில்லை என் வீட்டில்.
ஆனாலும் வேறு நல்ல வீடாய் பார்த்து கூடு கட்டி

அடிக்கடி வந்து போகும் என் முற்றம் தாண்டி.

என்றைக்கேனும் சில மணி அரிசிகளைச் சிதறுவேன்
சிறு அலகால் கொத்துவதை அருகிருந்து பார்ப்பேன்
ஆனால் இனி . . . கட்டாயம் பிடி அரிசி
தினம் தினம் சிதற வேண்டும் - ஏன் எனில்

கட்டுரையில் கரைந்திருந்தது இன்டியன் எக்ஸ்ப்ரஸ்
" "சிட்டுக் குருவி இனம் 80 விழுக்காடு அழிந்து விட்டது

மீதமுள்ளதோ வெறும் 20 விழுக்காடு மட்டுமே ""

கண்ணீர் உப்பிட்டு கைப்பிடி அரிசியை வைத்தேன் - ஏனோ
காணவில்லை இதுவரை என் சிட்டுக்களை.

3 comments:

Arunsiva said...

வணக்கம்,
இன்று உங்கள் வலை பூ கண்டேன் சூப்பர் FIRST IMPRESSION இஸ் தி பெஸ்ட் IMPRESSION எனவே உங்கள் முதல் பதிவான இந்த கவிதை படித்தேன், என்ன சொல்ல கிரேட் ! சிறகுகள் பறக்கட்டும்.

By Arunsiva