Sunday, March 27, 2005

பயணம்

இலைகளின் அசைவில் சோகம்
காற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் துவளலில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.

சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகை வண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்

மழை தூறும் மாலைப் பொழுதில்
உனைக்காண வருகையில்
காற்றால் தழுவி
சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்

ஆலும் அரசுமே நம் நண்பர்கள்

உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லை வரைதான்
நான் ஓடி வருவேன் -

பள்ளி செல்லும் பெண் பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில்
தனியே என்ன வேலை என்பார்களே ?

2 comments:

pirainilav said...

Good One
Cheers :)

Arunsiva said...

வணக்கம்,
உங்கள் முதல் கவிதை விருந்தாளி அடுத்த கவிதை கடிதம் அடுத்து பயணம் இதில் தெரியும் ஒரு பெண்ணின் தவிப்பு ஆஹா இதுவும் சூப்பர் . ஆனாலும் அந்த கடிதம் கவிதை டாப் . சிறகுகள் மேலும் பறக்கட்டும்.

By Arunsiva