Tuesday, April 05, 2005

மேற்கு சுனாமி

மேற்கு சுனாமி

இரு சக்கர வாகனத்தில்
இருவர் மூவராய். .
நாராச கூச்சலிட்டு
நகரெங்கும் சுற்றி. . .

நள்ளிரவில்
நடுத்தெருவில்
நட்சத்திர ஓட்டலில்
நளினங்களற்ற
நடனங்கள் ஆடி. . .

காரணமேயின்றி
காரிருளில்
கடற்கரையில் கூடி...

பொங்கும் பீர்
போதை ஏற்றி
போக்குவரத்தை தன்
போக்குக்கு மாற்றி...

அலட்டல் அலப்பரியாய்
ஆன்மீகச் செம்மலென
ஆண்டிறுதி நாளின்
அர்த்த ராத்திரியில்
ஆலயம் நோக்கி ஓடி . . . - என

இவை எதையுமே செய்யாமல். . .

இளம் காலை விடியலில்
இதமாய் உச்சி முகர்ந்து
" புது வருஷம் டா "" என்று
கன்னம் தட்டிச் சென்ற
என் தந்தையொடு. . .

இயல்பாய் வாழ்ந்த தமிழன்
அழிந்துதான் போய் விட்டான்.

2 comments:

அருள் குமார் said...
This comment has been removed by a blog administrator.
அருள் குமார் said...

நல்ல கவிதை. நீங்கள் மேற்சொன்ன அந்த கொண்டாட்டங்களிலும் ஒரு சுகமும், ரசனையும் இருக்கத்தானே செய்கிறது பத்மப்ரியா. எனக்கென்னவோ மேற்கு சுனாமியையும் பிடித்துதான் இருக்கிறது. நம்ம கலாச்சாரத்திலும் மிக்க ஈடுபாடு.