Sunday, April 17, 2005

செல்லம்

மழைக்காலம்
மாலை மயக்கத்தில்
மௌனமாய் சூரியன்

இருபத்தியெட்டு கிக்குகளுக்குப்பின்
உறுமும் என்
இரு சக்கர வாகனம்

உடை விலகலை
மழையிலும்
தவறாது கவனிக்கும்
சக வழி போக்கர்கள்

நனைந்து, தலைவழி வரும்
மழை நீரை குடித்து
தவணை முறையில் வந்தடைந்தேன்
என் செல்லமே
உன்னைக்காண.

உலராடை உடுத்தாமல்
உனது பசியறிந்து
குழம்பாய் காய்ச்சிய பாலை
இளஞ் சூட்டுடன்
அருகில் வைத்தால்

பஞ்சுப் பொதிபோல்
உருண்டையாய் எழுந்து
சின்ன
முழங்கால் நீட்டி
சோம்பல் முறித்து
கார்பெட் மேல்
மீண்டும் தூங்கும்
என் குட்டி நாயே. . .

ஆறிய பாலை குடிக்க
உனக்கு பிடிக்காதேடா. . .
அதற்காகவாவது எழுந்திரு.

4 comments:

Srinivas said...

azhagaga irundhathu.

vazhkayil pala chinnanjiru nigazhvugalai naam rasipathillai. ungal kavithaigal avatrai ninaivootuginrana.

glad i bumpled into your blog. its awesome, keep up the good work. i have plans to maintain a tamil blog too, but i thought i'll write them on plain paper, scan and post them, but ur font looks like it works just fine. can u tell me what font and what word processor use, and if u have a cheat code for writing in tamil?

nandri,
srinivas.

Vaa.Manikandan said...

//உடை விலகலை
மழையிலும்
தவறாது கவனிக்கும்
சக வழி போக்கர்கள்//

இவை போன்ற அழுத்தமான வரிகள் காணப்படினும்,என்னவொ ஒன்று தொலைந்தது போல் தோன்றுகிறது.
இவை போன்ற வரிகளை மட்டுமே நல்ல கூர்மைப்படுத்தி,படிப்பவரின் மனதில் கீறலை உண்டாக்க முடியும் என எண்ணுகிறேன்.பாருங்கள்

Pavals said...

//இருபத்தியெட்டு கிக்குகளுக்குப்பின்
உறுமும் என்
இரு சக்கர வாகனம்//

உங்க வண்டியும் இப்படித்தானா :-)..

btw மேல மணி சொன்னதை யோசிச்சு பாருங்களேன்.. இன்னும் கொஞ்சம் crisp & sharp'ஆ

பத்ம ப்ரியா said...

Hi
Shri, Mani & Rasa - heartiest thanks and i will crisp my writtings as u had adviced.