Wednesday, April 20, 2005

அவன்

அவனை எனக்குப் பிடிக்கும்
முந்தானை சரி செய்தல் போலும்
முன் நுதல் குழல் ஒதுக்குதல் போலும்
அவன் முகம் பார்ப்பேன்.

விழியால் இணைந்தோம்
இணைந்தே வீழ்ந்தோம்
காதலில்.

எங்கள் அகங்களோ அருகருகே
ஆனால் இல்லங்களோ எதிரெதிரே.

புதூ வண்டி.. . புதூ ஆரன்
அதிக அழுத்தம்
எனக்காக என் வீட்டு வாசலில்.

பின் இருக்கையில்
நான் வரவா என்றால்
வா என்கிறான்
பின் விளைவுகளை எண்ணாமல்.

தலையணை மந்திரத்தால் - என்
தலைவனை மந்திரித்தால்
தடையேதுமில்லையென - என்
தலை வருடி முத்தமிடுவார்.

ஆனால் . . . என்

மாமியாருக்கான மந்திரம்
ஏதுமில்லை என்னிடம்.

தன் தாய்க்கும் என் மாமிக்குமான
சண்டையை நிறுத்த
அவனுக்கு
இன்னும் வேண்டும் வயது
இப்போது தானே நான்கு...!

6 comments:

Pavals said...

//இன்னும் வேண்டும் வயது
இப்போது தானே நான்கு...!//
பேரன் ரகுவா?? :-)

ப்ரியன் said...

பத்மா மிக அருமை தொடரவும்

பத்ம ப்ரியா said...

Thank you Raasa & priyan.

தெய்வீகன் said...

வருக சகோதரி....!

இப்போதுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்.வாழ்த்துக்கள்.பணி தொடரட்டும்.தமிழ்இலக்கிய ஆர்வலர் என்ற வகையில் தனியே கவிதையுடன் மட்டும் நிற்காமல் அதர விடய்ஙகளையும் வலையேற்றலாமே.இது எனது பணிவான ஆலோசனை.இப்போதுதான் கவிதைத்தளங்கள் மலிந்துவிட்டன.

தொடர்ந்து எழுதுங்கள்.

பத்ம ப்ரியா said...

Thankyou arunan,
Now i am trying a short story. But what can we do.. it is all your fate to read that short story !?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

hi
thankyou for your comments for my all This is poem is really very touch. i like this type of poem which exposing actual life activities...then thanyour for your comments for all my poems...bye take care
Rasikow Gnaniyar