Friday, June 03, 2005

அவள்

உன்னை மட்டுமே பார்ப்பவள் நான்
உன்னை மட்டுமல்ல - இந்த
ஊரையே பார்ப்பவள் அவள் - என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு

அவளின் அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் அள்ளினாள் என்றாலும்
அலுக்கவில்லை உனக்கு அவளது ஒளி

யாரோடு யாரை ஒப்பிடுகிறாய் ?
நீ அவளையும் விரும்பித் தொலை
அதற்காக. . . . அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் - அவளை
ஓரப்பார்வை வேறு

அவளைப் பார்த்துக்கொண்டே
நான் வேண்டும் என்கிறாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவள் வேண்டும் என்கிறாய்

வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னைக் கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்

உன்னைப் பார்க்க இயலாத - அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு

நான் இருந்தாலும் போனாலும் -
இல்லை இல்லாமலேயே போனாலும்
நேர்தியாய் உன்னோடு மாலையில் அவளுன்டு

எனவே . . .

அப்புறப்படுத்து. . .அவளை
அதுதான் அந்த அழகிய நிலாப் பெண்ணை

நீ, அவள், நான் என
கோஷ்டி காதல் அனுசரிக்க
என்னால் இயலாது.

5 comments:

குழலி / Kuzhali said...

//அப்புறப்படுத்து. . .அவளை
அதுதான் அந்த அழகிய நிலாப் பெண்ணை//

ஹைக்கூத்தனமான முடிவு

நன்றாக உள்ளது


//வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்//

இங்கனயே உசாராயிருக்கனும், உட்டாச்சிபா

பத்ம ப்ரியா said...

Hi Kuzhali
Thankyou for your comments.

பத்ம ப்ரியா said...

Hi Jayabalan

Sorry .. no comments on your comments on AvaL.
( athu enna.. girlsai nilaa kooda compare panniththaan aaganumaa.. i object your honour)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

hi friend

really wonderful writing styles..pa....i like your articles very much.... ( kallakkunga pa....)
A Great SALUTE for your articles.........
bye take care

அருள் குமார் said...

கலக்கி இருக்கிங்க பத்மப்ரியா,
நிலவை ரொம்ப அற்புதமா பயன்படுத்தியிருக்கீங்க...உங்க அன்பை சொல்ல. ரசனையான கோபம். இன்றுதான் படிக்க நேர்ந்தது....உங்கள் பதிப்புகள் அணைத்தும். 'நினைவுப் பெட்டகம்' செம கலக்கல். ரொம்ப யதார்த்தம். டயலாக் லாம் இப்படி அசத்தி இருக்கிங்களேன்னு நினைசேன்...அப்புறம் தான் பார்த்தேன்... பாலகுமாரன் ரசிகையச்சே...
நிறைய எழுதுங்கள்... ரசித்துப்படிக்க காத்திருக்கிறோம்.
-அருள்.