Monday, July 11, 2005

நினைவுப்பெட்டகம் - 4


எஸ்.எம்.எஸ். டோன் கேட்டு தலை நிமிர்ந்தாள்.... மெசேஜா? இப்பவா? எடுத்துப் பார்த்தாள்


அழறியா பவி - அவன் தான்
ந்தோஷமாக இருந்தது அவளுக்கு.. அழுகை இன்னும் அதிகமாகியது

ஆமா அழறேன்... நீ எப்டிடா மெசேஜ் பண்ற? – பதில் அனுப்பினாள் அழுதுக்கொண்டே

லெப்ட் handல – பதில் வந்தது.. கொஞ்சம் தாமதமாக

சரி.. நான் ஜோக் அனுப்பட்டா? – வலி தெரியாது உனக்கு

அனுப்பு

நல்லதாக ஒரு ஜோக் நினைவில் நிறுத்தி நிதானமாக டைப் செய்து அனுப்பினாள்

ஜோக் அனுப்பு பவீ.... - பதில் வந்தது

சரியா போகலையோ...மீண்டும் ஒரு முறை அனுப்பினாள்

ஏதோ ஜோக் அனுப்றன்ன? எங்க..? – என பதில் வந்தது

அடப்பாவி.. இப்ப அனுப்னது ஜோக்டா...!?

அப்டியா...? சொல்றதில்லயா இதெல்லாம்..? - என்றான்

இன்னொரு நல்ல ஜோக் அனுப்புவோம் என்று மிக நீளமாக சத்தார்ஜி ஜோக் ஒன்றை அனுப்பினாள்

பிளாங்க் ஸ்க்ரீன் - வந்தது பதிலாக

என்னாச்சு...? ஒரு வேளை நாம அனுப்புற ஜோக் திராபைன்னு சிம்பாலிக்கா சொல்றானா? இல்லை கை வலிக்குதுன்னு ப்ளாங்க் மெசேஜ் அனுப்றானா?

இன்னோரு ஜோக் அனுப்ட்டா? - என்றாள்

இன்னிக்கு இது போதும் பவி - என்றான்

ஏற்கெனவே கைல கால்ல அடிபட்டு படுத்திட்ருக்கேன் பவி.. ப்ளீஸ்...-– என்றும் அனுப்பினான்...

மவனே..... இரு உன்னை என்ன பண்றேன் பாரு... வேண்டுமென்றே திராபையான இன்னோரு ஜோக் அனுப்பினாள்.

நம்ம ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணிக்கலாங்க்ற முடிவோடத்தான் இருக்கியா - என்றான்

இதுக்கு மேல தாங்க மாட்டான் என நிறுத்திவிட்டாள்

நர்ஸை சைட் அடிக்காம.. வேளாவேளைக்கு மருந்து சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடு... நான் ஈவ்னிங் ஆபீஸ் விட்டு கிளம்பும் போது போன் பண்றேன் என மெசேஜ் அனுப்பினாள்

வேண்டாம்... போன் பண்ணாத

ஏண்டா?

வேணாம் பவி...உன் குரலை எப்ப கேக்கணும்ணு எனக்கு தோணுதோ அப்ப நானே போன் பண்றேன்.. காலைல நீ பேசினதே போதும்... அதையே நினைச்சுட்டு இருப்பேன்.. அந்த நினைவை நீயே கலைக்காதே - என்றான்

உன்னைப் பற்றிய என்
உன்னதக் கனவுகளை
உடைக்கும் உரிமை - என்
உயிரே ....
உனக்குக் கூட இல்லை – (எப்டி ஐயாவோட கவிதை !!) என அனுப்பினான்

நல்லாருக்கு.. கிரேட்.. எப்டிடா இப்டி இன்ஸ்டன்ட்டா கவித எழுதற... நான் உன்னோட fan ஆய்ட்டேன்... ஆனா போன் பன்னட்டான்னா வேணாங்கற.... பைத்தியமாடா நீ-– என பதில் அனுப்பினாள்

ஆமா.. பவித்ரா பைத்தியம் - என்றான் அவன்

பல மாதங்கள் வெயில் மழை காற்று பூகம்பம் சுனாமி அக்கம் பக்கம் ஆபீஸ் என எதுவும் நினைவில் நிற்கவில்லை.. வெத்து மெசேஜ்கள் அந்த நாட்களுக்கு வானவில்லின் வண்ணத்தை அளித்தன.. ஆனால்..

அன்று தேவையில்லாமல் சண்டை நடந்தது... காலையில் Hi அனுப்பியதோடு சரி அதன் பிறகு மெசேஜே இல்லை.. அவள் இரண்டு முறை Hi அனுப்பினாள்.. பதில் இல்லை.. தாங்க முடியாமல் மதியம்...

ஏண்டா காலைலேர்ந்து மெசேஜ் அனுப்பல?

ப்ரெண்டோட வெளிய போனேன்

எங்க?

எங்கயோ .. உனக்கென்ன

ஏன் கோவமா இருக்க?

இல்லியே

நான் இன்னிக்கி ஆபீஸ்ல திட்டு வாங்கினேன்

வாங்கு

என்னாச்சு உனக்கு?

என்ன ஆகணும்?

சரி.. எங்க இருக்கற?

எங்க இருந்தா உனக்கென்ன?

ப்ளீஸ் சுஜீத்... என்னை பிடிக்கலயா...என்னை அவாய்ட் பண்றியா?

பிடிச்சா என்ன? பிடிக்கலன்னா என்ன? நாம சாகற வரைக்கும் மெசேஜ்தான்

என்னை என்ன பண்ண சொல்ற?

என் பிரண்டும் அவன் லவ்வரும் காலைலேர்ந்து பேசறாங்க... பேசறாங்க.. பேசறாங்க.. இன்னும் பேசறாங்க. 5 நிமிஷம் உக்காருடா இதோ வறேன்னு மாயஜால் சிமென்ட் பெஞ்ச்சுல உக்கார வைச்சுட்டு பக்கத்து பெஞ்சுக்கு போனவன்.. இன்னும் என்னை திரும்பி பார்க்கல.. நான் தனியா தேவுடு காத்துட்டு இருக்கேன்.

அவங்க லவ்வர்ஸ்.. அப்டித்தான் பேசுவாங்க.. நீ ஏன் அவங்க கூட போன? நீ எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டியது தானே..?

அனுப்பி...!? அனுப்பிட்டாலும்...! மகாராணி அப்டியே நகர் வலம் வந்து எனக்கு தரிசனம் கொடுத்றுவீங்க... போவியா பேசாம..

அதற்கு அவள் அந்த பதிலை அனுப்பியிருக்கக் கூடாது... அவர்களது பிரிவுக்கு அதுதான் வித்து என அறியாமல் அனுப்பினாள்

நான் எதுக்கு உன்னை வந்து பாக்கணும்... பார்த்து என்ன ஆகப் போகுது? பார்க்கவே வேண்டாம்...

சாகற வரைக்கும் இப்டியே எஸ்.எம்.எஸ் அனுப்பப் போறியா?

அனுப்பினா என்ன?

ஆமாமா.. ஆக்ஸிடென்ட் ஆகி ஆஸ்பிடல்ல படுத்திருக்கும் போது கூட மேடம் மெசேஜ் தான் அனுப்னீங்க..! அதுவே பெருங் கருணை...! போனாப் போகுதுன்னு போன் பன்னி பேசறேன்னு சொன்னீங்க..உன்னை வந்து பார்க்கட்டா சுஜீத்ன்னு ஒரு வார்த்த.. ஒரே ஒரு வார்த்த வந்துச்சா உன் வயிலேர்ந்து? கல்லுளி மங்கி மாதிரி இருந்த..

நீங்க ஆம்பிளை.. எங்க வேனா போவீங்க.. எப்ப வேணா வருவீங்க..பொம்பளை கஷ்ட்டம் தெரிஞ்சு பேசு சுஜீத்..

என்ன பெரீய கஷ்ட்டம்..? இவ்ளோ கெஞ்சுரானே... நாம மீட் பண்ணுவோம் சுஜீத்னு ஒப்புக்காவது சொல்றியா நீ..வேற ஒன்னுமில்ல... உன் டைம் பாஸ்க்கு நான் வேணும் உனக்கு...

சுஜீத் மைன்ட் யுவர் வெர்ட்ஸ்

மனுஷன சாகடிக்றத்துக்காகவே பொறந்திருக்கீங்கடி நீங்கள்ளாம்............

சுஜீத்.. நான் உன்னை விட பெரியவ.. அதை நியாபகம் வச்சுட்டு பேசு..

அவன் பதில் அனுப்ப வில்லை

அவளும் அனுப்பவில்லை... (அவள் அனுப்பத் தயாராகத்தான் இருந்தாள்.. ஆனால் அவன் அனுப்பினால்தானே அவள் பதில் அனுப்ப முடியும்)

கண்களில் கண்ணீர் எழுத்துக்களை மறைத்தது... யாரும் கவனிக்காதபடி துடைத்துக் கொண்டு.. முகத்தை இயல்பாக வைத்துக் கொள்வது மிகக் கடினமாக இருந்தது.. வேலைகளில் தவறு நேர்ந்தது.. கை கால்கள் படபடத்தன..... ஏண்டா.. ஏன்டா என்னை இப்டி சாகடிக்கற? நீ ஏன் ராங் கால் பண்ண எனக்கு? அவச்த்தைடா இது.. சே..

மறு நாள் காலை Hi கூட அனுப்பவில்லை அவன். சோர்வாகத்தான் அலுவலகம் வந்தாள். வேறு யாருக்கோ வந்த மெசேஜ் டோன் கேட்டு ஓடிப்போய் டேபிள் ட்ராவில் இருக்கும் தனது செல்லை எடுத்துப் பார்த்துப் பார்த்து எமாந்தாள். பைத்தியம் என்பது இதுதானோ..

எத்தனை முறை அவனாக Hi அனுப்பி இருக்கிறான்? இன்னைக்கு நாம அனுப்புவோம்.. ப்ரென்ட்ஷிப்ல தேவையில்லாம எதுக்கு மானம் ரோஷம்..?

Hi டா என அனுப்பினாள்

என்ன

இன்னும் கோவமா இருக்கியா?

கோவமாத்தான் இருக்கேன்னா என்ன பண்ணப் போற?

ஒன்னும் இல்லை

இதுக்கு நீ Hi சொல்லாமலேயே இருந்திருக்கலாம்...

நீ இப்டில்லாம் பண்ணா நான் உன்னை விட்டு போய்டுவேன்

போ.. ஆனா போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ

புரியல

போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி Bye சொல்லிட்டு ஒரேயடியா போய்டுன்னு சொன்னேன்

மெசேஜை படித்து..புரிந்து... உள் வாங்கிக் கொள்ள கொஞ்சம் நேரம் ஆகியது அவளுக்கு. புரிந்ததும் அந்த அதிர்ச்சியால் அசையாமல் நின்று விட்டாள்.

என்னையா.. என்னையா போன்னு சொன்ன சுஜீத்..? நீயா நீயா இப்டி மெசேஜ் அனுப்பின..? எப்டிடா அனுப்ப முடிஞ்சது உன்னால?

போன்னு சொல்ற அளவுக்கு நான் என்னடா தப்பு பன்னேன்..? “ நீ இந்த தப்பு பண்ண பவித்ரா.. அதனால நீ போய்டுன்னு “ சொல்லி இருந்தா நான் பேசாம போயிருப்பேனே..!ஆனா நான் எந்த தப்புமே பண்ணலயே சுஜீத் ... என்னை ஏன் போகச் சொன்ன..?
அழுதாள்... கேவிக்.. கேவி அழுதாள்.. அலுவலக டாய்லெட்டில் நின்று கட்டுப்படுத்த இயலாமல் அழுதாள்.. நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் நாங்க வரணுமா..?வரலன்னா... மசியலன்னா.. படியலன்னா.. போன்னு சொல்லிடுவீங்க.. நாங்க போயிடனும்..ப்ளாஸ்டிக் பொம்மையா நாங்க உங்களுக்கு... ?னான் போய்ட்றேன்டா.. உன்னை விட்டு முழுசா போயிட்றேன்... இனிமே இந்த பவி உனக்கு மெசேஜ் அனுப்ப மாட்டா... அனுப்பவே மாட்டா...போய்டுன்னு சொன்ன இல்ல என்னை?

அவனுக்கு வற்ற 18 பர்த்டேவாச்சே.. விஷ்ஷஸ் அனுப்ப கூடாதோ..? அனுப்பினா வெட்க்கம் கெட்டவளாய்டுவேன்.. சரி.. இன்னைக்கே உனக்கு என்னோட மானசீக பர்த்டே விஷ்ஷஸ் டா.. BYE டா.. என்னொட கடைசி bye சுஜீத்..எங்க இருந்தாலும் நல்லா இரு... -மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

பிரிவென்னும் பாலைவனத்தில் எதிரெதிர் திசை நோக்கி .. கண்ணீர் வற்ற.. கால்கள் துவள நடந்து.. இறுதியில் பிரிந்தே விட்டார்கள்.. ஆனாலும்..
---------------------------------------------------------------------
தொடரும்......

7 comments:

Jayaprakash Sampath said...

//கண்ணீர் வற்ற.. கால்கள் துவள நடந்து.. இறுதியில் பிரிந்தே விட்டார்கள்.. //

இது ரொம்ப அநியாயம். ஒரே அளுவாச்சியா வருது....அடுத்த அத்தியாயத்துலேயாச்சும், சுஜீத்தையும் பவித்ராவையும் சேத்து வெச்சிடுங்க ப்ளீஸ்....

Pavals said...

//ஆனாலும்..//
ஆனா... ஆனா ..??? ஒரு நாள் ஆபீஸ் லீவு போட்டுட்டு உக்காந்து டக்குன்னு அடுத்த பாகத்த எழுதிடுங்களேன்.. ப்ளீஸ்.. ஒரு பேமிலிபேக் சாக்லேட் வேனும்னா அனுப்பி வைக்கிறேன்.. :-)
(நம்ம கத முடிஞ்சிருச்சு:-(.. புரிஞ்சுதா??)

பத்ம ப்ரியா said...

Hi icarus, Raasaa and bala..

my heartiest thanks for your comments. Now i am typing the next chapter.. i will publish it at the earliest.

Then.. icarus and bala your blogs are not opening.. i tried to visit your blog it says"profile not available".. pls.. check it out.

Then .. Raasu.. what is this..?I think you may certainly aware that it is a story ..k..

Thanks..
M. Padmapriya

அருள் குமார் said...

ஏங்க இப்படி டென்ஷன் பண்றீங்க? சீக்கிரம் எழுதுங்க. ரொம்ப புதுமை பண்றதா நினைச்சு கடைசில ஏதாச்சும் சொதப்பிநீங்க... நானும் சென்னைல தான் இருக்கேன், தேடி வந்து ஆள் வச்சு அடிப்பேன். "ஜூலி கணபதி" பாத்திருப்பிங்கன்னு நினைக்கரேன். So be careful!

பரணீ said...

எங்க அடுத்த பாகத்தை காணம்னு தேடிட்டு இருந்த திங்ககிழமையே போட்டுட்டீங்க..

நிஜமாவே ரொம்ப டென்சன் பண்ணுறீங்க....

அடுத்த பாகம் எப்ப ?????????????????

பரணீ said...

வாசகர் பரிந்துரை/மறுமொழி சேவையினை ஏற்படுத்திக் கொள்ளுங்க.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=post_rating_comment_status

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=blogger_rating_guidelines

ப்ரியன் said...

ஐய்யயோ...