Saturday, July 02, 2005

நினைவுப் பெட்டகம்


அலோ.. நான் சுஜீத் பேசறேன்...இந்த நம்பர்தான் அப்பாவோட புது செல் நம்பர் .... நோட் பண்ணிக்க
அலோ.. உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?
முண்டம்...அப்பாவோடா புது செல் நம்பர்டீ இது... பர்ஸ்ட் கால் உனக்குத்தான்... உன் செல் மெமரில ஸ்டோர் பண்ணிக்கடீன்னா...

என்னது டீ யா...? அலோ... மிஸ்டர் முண்டம்..ராங் நம்பர்ல பேசிட்டு இருக்கீங்க .. வைங்க போனை.

அன்னியாயத்துக்கு ராங் நம்பர் வருது இந்த செல்லுல.... திட்டிக் கொன்டே வண்டியை ஸ்டார்ட் செய்தாள். பெட்ரோல் போட்டது போக மீதி சில்லறை வாங்க மறந்து போனாள்.
அடுத்த ஐந்து நிமிடங்களில், முக்கியமான சாலை திருப்பத்தில் சென்று கொண்டிருக்கையில் மீண்டும் செல் ஒலித்தது.. புது நம்பர்

அலோ... என்றாள்

அலோ... நான் முண்டம் பேசறேன்... சாரீங்க... என்னொட தங்கை நம்பர் ட்ரை பண்ணி உங்க நம்பர் கிடைச்சதால நான் உங்களை முண்டம்னு சொல்லிட்டேன்... அதுக்கு சாரீ சொல்லத்தான் இப்ப திருப்பி போன் பண்ணேன்.. சாரீங்க

இட்ஸ் ஆல் ரைட்... பரவாயில்ல.. நானும் உங்களை முண்டம்னு சொல்லிட்டேன் .. நானும் சாரீ..- என்றாள்

உங்க வாய்ஸ் ரொம்ப நல்லாருக்கு - ஏன்றான்

(ரொம்ப தைரியம் தான்.. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்)

நாங்க கேட்டமா உங்களை? எங்க வாய்ஸ் எப்டீன்னு... கொஞ்சம் விட்டா போதுமே

சொல்லனும்னு தோணுச்சு சொன்னேன்...வேணாம்னா விடுங்க..எதோ ரொம்ப நாளா பேசி பழகினமாதிரி இல்ல?

இல்லயே...!

சரி கோவமா இருக்கீங்க... ஒரே ஒரு விஷயம் மட்டும் கேட்டுக்கறேன்... ரொம்ப இம்பார்ட்டன்ட்

என்ன?

உங்க பேரு என்னன்னு சொன்னீங்கன்னா... நல்லாருக்கும்

ம்... என் பேரா? பண்டரிபாய்... வீட்ல குலேபகாவலின்னு கூப்டுவாங்க

என்று சொல்லி லைனை கட் செய்தாள். வண்டி ஓட்டும் போதும் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை அவளால். அவளது தெரு ஆஸ்தான நடமாடும் இஸ்திரி நிலைய இயக்குனர் அவள் தன்னைப் பார்த்துத்தான் சிரிப்பதாக நினைத்து அவரும் சிரித்தார்.

மறு நாள் காலை ஐந்தரை மணிக்கு எஸ். எம்.எஸ்.- குலேபகா.. குட் மார்னிங்.. என்ன பண்ற?

( அடப்பாவி...? இவனா..? நள்ளிரவு ஐந்தரை மணிக்கு குட்மார்னிங்கா..? அம்மாவே இன்னும் எழுந்துக்கல...வாசல் தெளிக்கிறவ வரல... அவ்ளோ ஏன் பால் பாக்கெட் கூட இன்னும் வரல... நடு ராத்ரில இவனுக்கு என்ன எஸ்.எம்.எஸ்?

தூங்கிட்டிருக்கேன் - பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பினாள்

தூங்கும் போதும் நீ பண்ற எஸ்.எம்.எஸ். அழகா இருக்கு-பதில் வந்தது

போதும் .... தாங்கலை... நான் தூங்கணும் - பதில் அனுப்பினாள்

சோம்பேறி

நீதான் அது

ஸ்கூல் போறியா? காலேஜ் போறியா?

ரெண்டும் இல்ல

டுடோரியல்ஸ் போறியா?

இயோ.. இன்னைக்கு சன்டே.. நான் எங்கயும் போகல

நாளைக்கு போவியா டுடோரியல்ஸ்?

முண்டம்...உனக்கு என்ன வேணும் இப்ப?

உன்னோட பேர் வேணும் இப்ப

சொன்னா எஸ்.எம்.எஸ் அனுப்ப மாட்டியே?

மாட்டேன்

அப்ப என் பேரு பவித்ரா.. ஓகே யா? (புனைபெயர் தான்..)

தேங்க்ஸ் பவித்ரா

ஒழி

அப்பாடா ஒழிஞ்சான் - புரண்டு படுத்து தூங்கி, அம்மா ராட்சசியின் அதட்டலில் ஒரு எட்டு மனிக்கா கண்விழித்து. ஆற அமர செல்ல் எடுக்கையில் காத்திருந்தது ஒரு மெசேஜ்

படிமங்களாய் உன் நினைவு
பவழங்களோ உன் உதடு
பரிவோடு நீ அனுப்பு
பதில் மெசேஜ் உடன் எனக்கு -
படித்து ரசித்துவிட்டு பதில் அனுப்பினாள் "என்னது இது..? கவித...?

எஸ்.. சரீ என்ன பண்ற? – உடனடியாக பதில் வந்தது

ஆறரை மணிக்கு அவன் அனுப்பிய மெசேஜுக்கு இவள் எட்டரை மணிக்கு பதில் அனுப்பினாலும்.. உடனடியாக பதில் அனுப்பினான். செல்லும் கையுமாத்தான் இருப்பானோ?

மகாத்மா காந்தியோட பேசிட்டு இருக்கேன் - பதில் அனுப்பினாள்

ஓகோ... கோட்சே நல்லாருக்காரான்னு கேட்டு சொல்லு – பதில் வந்தது

அலோ... நீ யாரு..? எதுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பற?

நம்ம பேக்கேஜ்ல எஸ்.எம்.எஸ் ப்ரீ இல்லயா? அதான் சும்மா சும்மா மெசேஜ் அனுப்பறேன்.

(எதுக்கு பதிலுக்கு பதில் அனுப்பனும்? பதில் அனுப்பாம இருக்கறதுதான் நல்லது என்று விட்டு விட்டாள். ஆனால் .. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவளுக்கு வந்த மெசேஜெஸ் பதினைந்து)

ப்ளீஸ்.. பவி.. ( அடப்பாவி.. அதுக்குள்ள பேரை சுருக்கிட்டான்?) நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்.. நம்பு.. மெசேஜ்ல என்ன பண்ண முடியும்? என்னமோ தெரியல..ஐ வாண்ட் டு பீ யுவர் ப்ரண்ட்...ப்ளீஸ்.. ஜஸ்ட் ப்ரண்ட் ஷிப்.. பவி.. ப்ளீஸ்...- பதினைந்தும் இதே போலத்தான்.

வொய்.. யு வாண்ட் டு பீ மை ப்ரண்ட்? நோ.. ஐ டோண்ட் நீட் தட்...- பதில் அனுப்பினாள்

ப்ரண்ட் ஆயிட்ட.. ப்ரண்ட் இல்லன்னா இப்டி பதில் அனுப்புவியா? - பதில் வந்தது

ஐயோ....

என் பேரு ஐயோ இல்ல.. சுஜீத்.. சரி.. என்னோட வீடு ஆழ்வார் திரு நகர்ல.. உன்னோட வீடு எங்க?

(போட்டு வாங்கறயா கண்ணா..? இரு.. எல்லாமே சொல்றேன் தப்பு தப்பா)

என்னோட வீடு வண்ணாரப்பேட்டைல - பதில் அனுப்பினாள் அடையாரிலிருந்து

எனக்கு ஒரு அக்கா, அப்பா ரெமில வொர்க் பண்றார். அம்மா அவுஸ் வொய்ப். இஷ்டமிருந்தா உன்னோட டீடெய்ல்ஸ் தா... பிடிக்கலன்னா விட்று

எனக்கு ஒரு தம்பி.. ( அப்பா போலீஸ்னு சொல்லி வைப்போம்.. அப்பத்தான் பயம் இருக்கும்). அப்பா போலீஸ், அம்மா வீட்லதான் இருக்காங்க - பதில் அனுப்பினாள்

(கடவுளே.. அப்பா வேலையப்பத்தி அவன் ரொம்ப கேக்கக் கூடாது.. போலீசை பத்தி எதுவுமே தெரியாம எப்டி சமாளிக்கறது)

ஓகோ.. என்னோட ஏஜ் 20... உன்னோட ஏஜ்?

கேர்ல்ஸ் கிட்ட ஏஜ் கேக்கக் கூடாது

வாஸ்தவம்தான்... ஆனா.. ராட்சசிகிட்ட கேக்கலாம்.. சொல்லு

(எவ்ளோ தைரியம்? எவ்ளோ தீர்மானமா பேசறான்? அதிகமாகவே சொல்லி.. அக்கா சென்டிமென்ட் ஆக்கிடலாம்.. அதான் கரெக்ட்)

என்னோட ஏஜ் 22.. நான் உனக்கு அக்கா

என்னது..? 22 ஆ ஆ ஆ ஆஆ...!

ஏன் ஷாக் ஆயிட்டியா? அதுக்குதான் அப்பவே சொன்னேன் இந்த ப்ரண்ட்ஷிப்பெல்லாம் வேண்டாம்னு.. நீதான் கேக்கல - சந்தோஷமாக மெசேஜ் அனுப்பினாள்

இல்ல... 40 இருக்கும்னு நினைச்சேன்

கொழுப்புதாண்டா உனக்கு

என்னாது..? டா வா?

ஆமா.. டா தான் டா

சரி விடு... எஸ்.எம்.எஸ்ல இதெல்லாம் சகஜம் பவி

(அடப்பாவி விடாகண்டனா இருக்கான்..!)

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுபோய் தொடராமல் இருக்குமா..? – தொடரும்
. ..

7 comments:

Pavals said...

ஆஹா.. எப்படிங்க இப்படி.. நான் ஒரு ரெண்டு நாளா இப்படித்தான் அவஸ்த்தைப்பட்டுட்டு இருக்கேன்..யாரோ ஒரு 'தேவா' கூட.. கதையா எழுதிடிவொமான்னு விபரீதமா ஒரு முடிவு கூட எடுத்தேன்.. என்ன நான் எழுதியிருந்தா, 'சுஜித்'க்கு 'பவி' அனுப்பற மாதிரி இருந்திருக்கும்.. அதுக்குள்ள நீங்க முந்திட்டீங்க..

Pavals said...

அப்புறம் அந்த align='justify' எடுத்துவிட்ருங்க.. பயர்பாக்ஸ்'ல தமிழ் சந் தகை புழிஞ்ச மாதிரி வருது :-(

பரணீ said...

நல்லா இருக்கே...
தொடருங்க

posted by: பரணீ

Narayanan Venkitu said...

Fantastic.! First time here..! Engirundhu vandhen theriyavillai!But vandhadhu veen illai. Really interesting and funny..

LOL :)

ம்... என் பேரா? பண்டரிபாய்... வீட்ல குலேபகாவலின்னு கூப்டுவாங்க

ப்ரியன் said...

பத்மா கலக்குறிங்க...உங்களுக்கு நகைச்சுவை அருமையா வருது கலக்குங்க...நம்பினா நமபுங்க எனக்கும் இந்தமாதிரியான அநுபவங்கள் உண்டு ஆனா கடைசிலப் பாத்தா அது பெண்ணு இல்லே பசங்க அதுவும் எங்கப் பசங்க...போனமாசம் கூட சிங்கைல இருந்து ஒரு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) வந்துச்சு இது நாள் வரைக்கும் யார்னு தெரியலை

பத்ம ப்ரியா said...

Hi

Raasa, Barani, Venkat & priyan.. my heartiest thanks for your comments on Ninaivup pettagam.

Thank you - M. Padmapriya

வீ. எம் said...

பத்மப்ரியா,

நினைவு பெட்டகம் அருமை.. யதார்த்தம் + நகைச்சுவை..
எப்படி முடிக்க போறீங்க??? :)
நேரம் இருக்கும் போது இதை படித்து பாருங்க :
http://arataiarangam.blogspot.com/2005/06/blog-post_09.html
வீ எம்